பக்கம்:மறைமலையம் 3.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131



18. இங்குள்ளபடி அங்கும்

இவ்வுண்மையை நன்குணர வேண்டுவோர் இந்நில வுலகத்தின் இயற்கைகளைச் சிறிது ஆராய்ந்து பார்ப்பராயின் அது செவ்வையாகப் புலப்படும். இம் மண்ணுலகத்தின் மேற்பரப்பானது பல நாடுகளாக வகுக்கப்பட்டுக் கிடக்கின்றது; அவ்வந் நாடுகளில் உள்ள மக்களின் முகங்குறி குரல் சாயல் முதலியனவெல்லாம் பலதிறப்பட்ட வேறுபாடுகளுடன் காணப்படுகின்றன; அங்குள்ள பறவைகளும் விலங்கினங்களுங் கூடப் பல்வேறு தன்மை யுடையனவாய்த் தோன்றுகின்றன; ஆங்காங்குள்ள மரஞ்செடி கொடிகளுங்கூட வேறுவேறு இயற்கையுடையனவாகவே யிருக்கின்றன; இவ்வுயிர்ப் பொருள்களோடு ஒன்றுபட்டு இயந்து நிற்கும் நில அமைப்புகளுங்கூட வேறுபட்ட இயல்பினவாகவே யிருக்கின்றன. ஐரோப்பிய நாட்டில் வசிக்கும் வெள்ளைக்காரர் எவ்வளவு வெண்மையான நிறமும் அழகும் உயர்ந்த தோற்றமும் உடையராயிருக்கின்றனர்! ஆப்பிரிக்கா நாட்டில் வசிக்கும் நிகிரோவர் எவ்வளவு கருமையான நிறமும் பருத்த உதடும் நீண்ட மோவாயும் சுருண்ட மயிருமுள்ளவராய்ப் பார்க்கப் பாந்தமின்றி யிருக்கின்றனர்! சீனதேசத்தில் உள்ள மாந்தர் அகன்ற முகமும் சப்பை மூக்கும் பழுப்பான நிறமும் உடையவரா யிருக்கின்றனர்; நம் இந்திய நாட்டில் உள்ளவர்களோ திருத்தமான அவயவங்களுடைராயினும் சிலர் கரிய நிறமும் வேறு சிலர் பொன்னிறமும் மற்றுஞ் சிலர் இவ்விரண்டிற்கும் பொதுவான நிறமும் உள்ளவராய் இருக்கின்றனர்; அமெரிக்கா தேசத்திலுள்ளவர்களோ தடித்த உறுப்புகளோடு செவேலென்ற செந்நிறமும் வாய்ந்து காணப்படுகின்றனர்; இங்ஙனம் பலதிறப்பட்ட இயற்கைகளுடை மக்களோடு ஒத்த இயல்பினவாக அவர்களைச் சூழ்ந்துள்ள பிராணிகளும் மரஞ் செடி கொடிகளும் ஏனைப் பொருள்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/164&oldid=1624583" இலிருந்து மீள்விக்கப்பட்டது