பக்கம்:மறைமலையம் 3.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148



25. வெள்ளிமண்டில இயற்கை

இனிச் சுக்கிரவுலக மெனப்படும் வெள்ளி மண்டிலமும் நமதுலகிற்கும் சூரியனுலகிற்கும் இடையில் இயங்குவதேயாகும். இது ஞாயிற்றுமண்டிலத்தைச் சுழன்று கொண்டு நமது நிலவுலக முகமாய் வருகையில் இதற்கும் நமக்கும் இரண்டு கோடியே ஐம்பதுலட்சம் மைல் தூரம் இருக்கின்றது; இது நம்மை விட்டுச் சூரியனுக்கு அப்பக்கமாய்ச் செல்லும் போது இதற்கும் நமக்கும் இடையில் பதினாறுகோடி மைல் தூரம் ஆகின்றது. ஆகையால், இது நமதுலகத்தின் பக்கமாய் வரும்போது இதனை உற்றுப் பார்த்து விவரங்கள் தெரிந்து கொள்வதற்கு இடமுண்டாவது பற்றி, அச் சமயத்தை வானநூற் புலவர்கள் ஆவலோடு நோக்குகின்றார்கள். இவ் வெள்ளி மண்டிலமானது நமது மண்ணுலகத்தின் பரிமாணமேயுள்ளது. திங்கள், புதன் மண்டிலங்களில் வளர்தல் குறைதல்கள் காணப் படுவது போலவே வெள்ளி மண்டிலத்திலும் அவை காணப் படுகின்றன. புதன் மண்டிலத்தைவிட மண்டிலத்தின் ஒளி நிரம்பவுங் கிளர்ச்சியுள்ள தாய் ஒளிருகின்றது. பல தடவைகளிற் புள்ளிகளும் நிழல்களும் வெள்ளி மண்டிலத்தின் மேற் றோன்றினமையால் அவை அங்குள்ள மலைகளின் அடையாளங்களா மன்று உய்த்துணரப் படுகின்றன. வான நூற் புலவர் ஒருவர் தாம் புதன் மண்டிலத்தில் மிக உயரமான மலையைக் கண்டது போலவே வெள்ளி மண்டிலத்திலும் அத்தகையவான மலைகள் பல இருக்கக் காண்பதாக உரைக்கின்றார். வெள்ளி மண்டிலமும் நமதுலகத்தைப் போலவே சற்று ஏறத்தாழ இருபத்துநான்கு மணி நேரத்தில் தன்னைத் தானே சுற்றுகின்றது; ஏழரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/181&oldid=1624601" இலிருந்து மீள்விக்கப்பட்டது