பக்கம்:மறைமலையம் 3.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
149

மாதத்தில் ஞாயிற்று மண்டிலத்தைச் சுற்றிவருகின்றது. இவ் வெள்ளிமண்டிலத்தின் தென்முனையில் ஒரு புள்ளி வெளிச்சம் அடிக்கடி காணப் படுதலால், அஃது அங்கே மிக உயர்ந்துள்ள மலை முகட்டின் மேற்படும் ஞாயிற்றின் ஒளிதான் என்று உறுதிப்படுத்தப் பட்டிருக்கின்றது. இம் மண்டிலத்தின் வடமுனை தென்முனை இரண்டும் ஒரே காலத்திற் கட்புலனா கின்றனவென்றும், அம் முனைகளிற் பெரும் பனிப்பாறைகள் தென்படுகின்றனவென்றும் மற்றொரு சிறந்த வானநூற் புலவர் கூறுதலால், நம்முலகத்தும் செவ்வாய் மண்டிலத்தும் உள்ள துருவ தென்துருவ இயற்கைகளே வெள்ளியுலகத்தும் உண்டென்பது தெளியப்படும். இவ்வாற்றல் வெள்ளி மண்டிலத்தில் அவ்வுலகத்திற்கு இயைந்த உடம்போடு கூடிய உயிர்கள் உண்டென்பதும் துணியப்படும். இது நிற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/182&oldid=1624922" இலிருந்து மீள்விக்கப்பட்டது