பக்கம்:மறைமலையம் 3.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
150

❖ மறைமலையம் - 3 ❖



26.சனிமண்டில இயற்கை

இனிச் சனிமண்டிலத்தைப்பற்றிச் சிறிது கூறுவாம். சொல்லுதற் கடங்காப் பேர் அழகும் பேரொளி விளக்கமும் வாய்ந்து காணப்படும் சனிமண்டிலக் காட்சி பேர் அற்புதம் உடையதாய் இருக்கின்றது.இது ஞாயிற்று மண்டிலத்திற்கு எண்பத்தெட்டுக் கோடியே அறுபது அறுபது லட்சம் மைல் தூரத்திலும், நமது நிலவுலகத்திற்கு எழுபத்தொன்பது கோடியே முப்பதுலட்சம் மைல் தூரத்திலும் சுழலுவ தொன்றாகையால், இத்துணை நெடுந்தூரத்திலிருந்து நோக்கும் நம் வெறுங் கண்களுக்கு அஃது ஒரு சிறு புள்ளி வடிவினதாகவே தோன்றுகின்றது. ஆனால் மிகப் பெரியதும் சிறந்ததுமாகிய ஒரு தொலைவுநோக்கிக் கண்ணாடியின் வழி தனை நோக்குவார்க்கு இது புலப்பட்டுத் தோன்றும் அற்புதக் காட்சியை என்னென்று கூறுவேம்! இம் மண்டிலம் நடுவில் ஓர் ருண்டை வடிவமும்,அவ்வுருண்டையில் மோதிரம் இட்டாற் போன்ற ஒரு வளைய வடிவமும் அமைந்து மிகுந்த ஒளியோடும் துலங்குகின்றது. இதனைச் சோதியுருவான ஒரு சிவலிங்க வடிவமாகவே சொல்லலாம். இம் மண்டிலத்தின் ஒளியினையும் வடிவினையும் நோக்கிய வான நூலாசிரியர் எவரும் இதனை வியந்து புகழ்ந்து பேசாமற் போவதில்லை. இனி, மேலெடுத்துப் பேசிய வியாழமண்டிலத்திற் காணப்பட்ட அரைக்கச்சுப் போன்ற வரிவடிவங்கள் இச் சனிமண்டிலத்தின்கண்ணும் காணப்படுகின்றன; இவையும் அங்குள்ள முகிற்குழாங்களின் பிளவுகளின் ஊடே தோன்றும் அவ்வுலகத்தின் நிலமென்றே உய்த்துணரப் படுகின்றன. இவ்வுலகத்தின் நிறம் மஞ்சள் கலந்த வெண்மை யாகவும், இதன் வரிவடிவங்கள் சில சாம்பல் நிறம் உடையனவாகவும் சில பச்சை நிறம் உடையனவாகவும் புலப்படுகின்றன. இதன் தட்சிண துருவமாகிய தென்முனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/183&oldid=1624927" இலிருந்து மீள்விக்கப்பட்டது