பக்கம்:மறைமலையம் 3.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
168

❖ மறைமைலயம் - 3 ❖


இந்நூலைப் பற்றிய குறிப்புரை...

அடிகளார் பெற்ற பற்ற சிவயோகப் பயிற்சியின் விளைவு இந்நூலாகும். பேராசிரியர் கந்தசாமியாரை அறிதுயிலில் அமர்த்தித் தம் கட்டளைகளையெல்லாம் அவர் செய்யுமாறு அவையில் காட்டினார், அடிகள். அவர் மகனார் திருநாவுக்கரசின் இளைப்பு இருமலை இத்துயிலால் அகலச் செய்தார்.

ஒவ்வொருவர் அறிவும் உணர்ச்சியும் அறிதுயிலில் சென்ற அளவிலே பேரொளியோடு விளங்கிக் கண்ணும் காதும் உணராத மறைபொருள்களை அறியும். தீரா நோயரையும் மருந்தில்லாமல் நலப்படுத்தலாம்; தீய தன்மையும் செயலும் உடையவரை அவற்றில் இருந்து விலக்கலாம்; பின்வருவதை முன்னர் அறிந்து கொள்ளலாம்; வாழ்வுக்கு வேண்டும் நலங்கள் எல்லாம் கைவரப் பெறலாம்; இறைவன் திருவருளை இப்பிறப்பிலேயே அடைந்து பேரின்பப் பெருநிலை எய்தலாம். இவை அறிதுயிலால் அடையப்பெறுவன என்பதை இனிய தூய தமிழில் விளக்குவது இந்நூல். 1922 இல் வெளிவந்தது.

இரா. இளங்குமரன்
இந்திய இலக்கியச் சிற்பிகள்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/201&oldid=1625197" இலிருந்து மீள்விக்கப்பட்டது