பக்கம்:மறைமலையம் 3.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
180

❖ மறைமலையம் - 3 ❖



. அறிதுயில்

L

இவ்வறிதுயிலானது உயிர்களிடத்து இயற்கையிற் காணப்படாவிடினும், சிலநாட் பழக்கத்தால் அதனை அவர்களிடம் வருவித்து அவ்வுயிர்களை நம் விருப்பப்படி நல்வழியில் திருப்பலாம். இவ்வறிதுயிலை இங்ஙனம் பிற உயிர்களிடம் வருவிப்பது போல, ஒருவன் அதனைத் தன்னிடத்திலும் வருவித்து அதன் றுணையால் தன் உயிரின் ஆற்றலைப் பெரிதும் மிகுதிப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், இதனைப் பிறரிடம் விளைவித்தல் போலத் தன்னிடம் விளைத்தல் மிகவும் அருமையாகும். தன்னிடத்தில் விளைத்துப் பயன் பெறுதற்கு இடைவிடாத ஒருமைப்பழக்கம் ஒன்றே உதவி செய்யு மல்லது வேறு ஒன்றும் உதவி செய்யமாட்டாது.பிறவுயிர்களிடம் இவ்வறிதுயிலை உண்டு பண்ணுவதற்கு ஒருவன் சில நாட்கள் மனம் ஒருமித்துமுயன்றால் அஃது எளிதிற் கைகூடும்.

இனி இவ்வறிதுயிலைத் தன்னிடம் விளைவிக்கவும் பிற வுயுர்களிடம் விளைவிக்கவுங் கற்றுத் திறமைமிக்கவர்கள் இவ்விந்திய நாட்டிலுள்ள தவத்தவர் (தவசி) களும், முனிவர்களும், அகத்தவத்தவர் (யோகி) களும், மெய்யுணர்வினர் (ஞானி)களும் ஆவர். இவ்வித்தையானது பல்லாயிரம் ஆண்டுகளாக இவ்விந்திய நாட்டிலுள்ள முனிவர்களாற் கையாளப்பட்டு வந்ததாகும். அங்ஙனம் நம் முனிவர்களால் இவ்வரிய வித்தை கையாளப்பட்டு வந்தாலும், பக்குவம் முதிர்ந்த சீடர்களுக்கன்றி மற்றையோர்களுக்கு இதன் உண்மை சிறிதும் அறிவிக்கப்படவில்லை. இதனால் இவ்வித்தையானது இந் நாட்டிற்கு மிகப் பழமையான தொன்றாய் இருந்தும், இங்கே விளக்கம் பெற்று வழங்காமல் எங்கோ இலைமறைகாய் போல் இருந்து வந்தது. இஃது இங்கே இப்படியிருக்க, ஐரோப்பாக் கண்டத்தில் இற்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னிருந்த மெசுமர் என்னும் பெரியவர் இவ் வித்தையை எப்படியோ கற்றுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/213&oldid=1624005" இலிருந்து மீள்விக்கப்பட்டது