பக்கம்:மறைமலையம் 3.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
188

❖ மறைமலையம் - 3 ❖



3. மூச்சு

உட ம்பின் வலிவுக்கு முதன்மையான மூச்சு ஓட்டத்தை ஒருவாறு ஒழுங்குசெய்து, கொள்ளல்வேண்டும். நல்ல காற்று ஓட்டம் உள்ள ஓர் அறையிலே தனிமையாகப் போய் நாற்காலியிலாயினும், நிலத்தில் மணைமேலாயினும் இருந்து கொள்ளல்வேண்டும். இருந்தபின் முதுகு கழுத்து முதலிய உறுப்புகள் சிறிதும் வளையாமல் நேராக நிற்கும்படி செய்தல்வேண்டும். அதன்பின் வலதுகைப் பெருவிரலால் வலது மூக்கை அடைத்து, இடது மூக்கால் உள்ளிருந்த காற்றை வெளியே மெதுவாய்க் கழித்துவிடுக. அங்ஙனங் கழித்தவுடனே அவ்விடது மூக்கினாலேயே வெளியேயுள்ள காற்றை மெதுவாக உள்ளே இழுத்துப் பிறகு வலதுகை மோதிர விரலால் இடது மூக்கை அடைத்துக்கொண்டு வலது மூக்கைத் திறந்து, உள்ளிழுத்த காற்றை அதன்வழியே மெல்ல மெல்ல வெளிவிடுக. அவ்வாறு வெளிவிட்டபின் மறுபடியும் அவ்வலது மூக்கினாலேயே வெளியேயுள்ள காற்றை உள்ளிழுத்து இழுத்தவுடன் வலது மூக்கை முன்சொன்னவாறே அடைத்துக் கொண்டு, இடது மூக்கைத் திறந்து உள்ளிழுத்த காற்றை அதன் வழியே மெல்ல வெளிவிடுக. இங்ஙனம் இடது மூக்கிலிருந்து வலது மூக்குக்குப் போய்த் திரும்பவும் இடது மூக்கில் வந்து முடிவது ஒரு மூச்சு ஓட்டமாகும். இங்கே சொல்லியவாறு மாறுபடாமல் ஏழுமுறை மூச்சுக் கொள்ளுதல்வேண்டும். இப்பழக்கத்தை விடியற் காலையில் உறக்கம் நீங்கி எழுந்தவுடனும், நீராடிய பின்னும், மாலை நேரத்திலும் வெறுவயிற்றில் முறைதவறாமற் செய்துவருக. இப்பழக்கத்தால் செந்நீர் தூய்மைப்பட்டு உடம்பிலுள்ள அகக்கருவிகள் வலுப்படுவதுடன், மனமும் தலைவிரிகோலமாய்ப் பலவாறு ஓடும் ஓட்டத்தினின்று மடங்கி அடங்கும். சினமாவது வேறு மனவருத்தமாவது கவலையாவது உண்டாகும்போதெல்லாம் மேற்சொல்லியவாறு ஏழுமுறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/221&oldid=1624016" இலிருந்து மீள்விக்கப்பட்டது