பக்கம்:மறைமலையம் 3.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
198

❖ மறைமலையம் - 3 ❖

என்னும் நீதியுரையைக் கடைப் பிடித்துத் தீயோர்க்கு அஞ்சி நல்லவற்றை நெகிழவிடாது அவற்றைக் கிளர்ச்சியோடும் சிக்கெனப் பிடித்தலே உயிர் ஆற்றலை மிகச்செய்வார்க்கு உரியதாகும். மலையுருண்டாலுங் கடல்புரண்டாலும் நிலன் அதிர்ந்தாலும் புயல் அடித்தாலும் அச்சம் அடையாமல் உண்மை நெறியில் உறைத்து நிற்கவேண்டும். எல்லாம் வல்ல இறைவனையே ஒப்பற்ற துணையாக நாடி நிற்கப் பெறுகுவமாயின், நாம் எதற்கும் அஞ்சாது மனத்திட்பத்தை அடைவம். இதுவேதான் நாம் அச்சம் அடையாமல் இருத்தற்கு இலேசான வழியாமென்க.

இனித் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார்,

“அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்.”

என்று தொகுத்துச் சொல்லிய பாவங்கள் நான்கில் அழுக்காறு என்னும் பொறாமையை முதலில் வைத்துச் சொல்லியிருப்பதனால், இதன் கொடுமை ஏனை மூன்றினும் மிகப் பெரிதாமென்பது நன்கு புலப்படுகின்றது. மற்றைச் சாமானிய மனிதரிடத்திற் காணப்படும் பொறாமையை விடக் கல்வியறிவுடையோரிடத்தும் செல்வமுடையோரிடத்தும் இத்தீய குணம் நிரம்பவுங் கொழுந்துவிட்டு எரிகின்றது. இவர் இத்தனை கல்வியுடையராயிருத்தலையும், இவர் அதனான் மிக்க புகழ் எய்துதலையுங் கண்டு எம் வயிறு எரிகின்றதே, இவர் தொலையும் நாள் எந்நாளோ' என்று கல்வியுடையவர் மனம் புழுங்குகின்றனர், ‘இவர்க்குள்ள பொருள் எமக்கில்லையே பாழுந்தெய்வமே இவர்க்கு மட்டும் இத்தனை பொருளையும் செல்வாக்கினையுந் தந்தனையே, இவர் இவற்றையெல்லாம் இழந்து வறியராய் அலையாரோ. இவர்க்குள்ள செல்வம் எல்லாம் யாம் அடையேமோ’ என்று பலவாறு மனம் பேதுற்றுச் செல்வரும் பொறாமைப் படுகின்றனர்.

இங்ஙனம் பொறாமைப்படுகிறவர்களைக் கண்டால் இவர்களுடைய புன்மையைக் கண்டுநமக்கு இரக்கம் உண்டாகாமற் போகாது. பிறர்க்குள்ள பெருமையைக் கண்டு மனம் புழுங்கும் போகாது. பிறர்க்குள்ள இவர் கல்விகற்று என்பயன்? செல்வம் உடையராய் என்பயன்? இவர் எந்நேரமும் மனப்புழுக்கத்திலே கிடந்து புழுப்போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/231&oldid=1628271" இலிருந்து மீள்விக்கப்பட்டது