பக்கம்:மறைமலையம் 3.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
226

❖ மறைமலையம் - 3 ❖

அதனினின்றும் எளிதிற் றேறும். கல்யானை பருத்த வல்லுடம்பு உடையதாயினும், மெல்லுடம்பு வாய்ந்த மானின் ஓட்டத்தைப் பிடிக்குமோ? மேலும் திண்ணிய வுடம்புடைய நாட்டுப் புறத்தவர்களிற் பெரும்பாலார் அறிவிற்றாழ்ந்தவராய் இருக்க, நகரத்தில் வாழும் மெல்லிய வுடம்புடையார் அறிவுந் திருத்தமும் வாய்ந்தவராய்க் காணப்படுகின்றனர். இவற்றையெல்லாங் கூர்மையாக நினைந்து பாக்குங்கால் இறுகிய வுடம்பும்,அதனை உண்டாக்கும் கடுகிய உழைப்பும் அறிவு வளர்ச்சியினை விரும்புவார்க்கு வேண்டப்படுவன அல்ல என்று அறிகின்றோம்.

இன்னும் மனிதன் தான் உடம்பால் வருந்தி உழைத்தலைக் குறைத்து அறிவின் முயற்சியால் அரிய பெரிய தொழில்களை யெல்லாம் செய்துமுடித்தற்கு முந்தவேண்டும் பாருங்கள்! வெள்ளைக்காரர் தமது நுண்ணறிவு முயற்சியால் எவ்வளவு அருமையான பொறிகளையெல்லாம் அமைத்து, அவற்றி னுதவியால் எத்துணை அருமையான தொழில்களை யெல்லாம் விரைவிற் செய்து முடிக்கிறார்கள்! எத்தனை மனிதர் வருந்தி உழைத்து ழுத்தாலும் இழுத்துச்செல்ல இயலாத வண்டித்தொடர்களை யெல்லாம் நீராவிப் பொறியால் விரைவில் ஓடச்செய்து அளவிடக்கூடாத நன்மைகளை யெல்லாம் அவர்கள் எளிதில் விளைவித்து வருகின்றார்கள். எத்தனையோ ஆயிரம் மைல் மல் அகலமுள்ள கடலுக்கு அப்பாலுள்ள நாடுகளுக்கெல்லாம் பண்டங்களும் மக்களும் எளிதிற்போய் வரும்படி காற்றுக்குஞ் சுழலுக்கும் அலைக்கும் அஞ்சாத கப்பல்களை அந்நீராவிப் பொறிகளால் ஓட்டி அவர்கள் உலகத்திற்குச் செய்துவரும் நன்மைகளைக் கணக்கிட்டுச் சொல்ல இயலுமா?

இவைகள் எல்லாம் மக்கள் தமது உடம்பினுழைப்பால் மட்டும் செய்துமுடிக்கக் கூடியன ஆகுமா? பல்லாயிரம் மைல்தூரம் விரிந்த கடலின் இரண்டு பக்கத்தும் உயிர்வாழும் மக்கள் தாம் ஓரிடத்தில் இருப்பது போல் அரும்பெருங் காரியங்களை எளிதிற் பேசிக் கொள்ள உதவி செய்யும் தந்தி தபால் தந்தியில்லாத் தபாலென்னும் இவற்றின் நன்மையை என்னென்று கூறுவோம்! இவையெல்லாம் மக்கள் அறிவின் நுட்பத்தால் உண்டாயினவே யல்லாமல், அவர்தம் உடம்பின் உழைப்பால் உண்டாயின அல்லவே! இப்பொறி இயக்கங்களால் மக்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/259&oldid=1626067" இலிருந்து மீள்விக்கப்பட்டது