பக்கம்:மறைமலையம் 3.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
242

❖ மறைமலையம் - 3 ❖

நாலைந்து வாரங்களுக்கு முன் பார்த்தபோது நீங்கள் மிகவுஞ் செவ்வையான நிலைமையிற் காணப்பட்டீர்கள்; இப்போதோ தங்கள் முகம் ஒடுங்கி வருவதோடு உடம்பு மெலிந்து தோன்றுகின்றது, குரலொலியும் வேறுபட்டிருக்கின்றது. ஏதோ பொல்லாத நோய் உங்களுடம்பில் மறைவாயிருந்து உருக்கி வருகின்றது.உடம்பைச் செம்மையாய்ப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்றார். சில நாட்களுக்குமுன் முதலிற் காணவந்தவர் சொல்லிய சொற்களால் ஏற்கெனவே மனக்கவற்சி யடைந்திருந்த அந்நண்பர் இப்போது வந்தவர் சொல்லியவற்றையுங் கேட்ட அளவானே அக்கவற்சி மிகப் பெற்றவராய்த் தம்முடம்பில் ஏதோ ஒரு நோய் மறைவாக இருக்கத்தான் வேண்டுமென்று நம்பத்தலைப்பட்டு 'ஆம் சில நாட்களாக என்னுடம்பில் இன்னதென்றறியப்படாத ஒரு நோய் இருப்பதாகத்தான் தெரிகின்றது. அதனாலேதான் இந்த வாட்டமும் மெலிவும், இதற்குத் தக்க மருந்து உண்டு தனைத் தீர்த்துக்கொள்ளல் வேண்டும்.' என அவர் சொற்களுக்கு உடன்பட்டு விடை கூறினார். பார்க்க வந்தவரும் உடம்பைச் செவ்வையாகப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டுப் போயினார்.

இதற்குப் பின் இந்நண்பருடம்பு உண்மையாகவே மெலிந்து வரலாயிற்று. உயர்ந்த பல அரிய மருந்துகளைத் தக்க மருத்துவர் சொற்கொண்டு வாங்கி உண்டும், அந்நோய் தீராமல் நாளுக்கு நாள் மிகுந்து வரலாயிற்று. இங்ஙனமாகி வருகையில் மூன்றாம் முறை மற்றொருவர் இவரைப் பார்க்கவந்தார். வந்தவர் இவரைப் பார்த்தவளவானே வியப்புந் துயரமும் அடைந்தவராய் ஆ ஈதென்ன! யான் இரண்டு மூன்று திங்களுக்குமுன் தங்களைப் பார்த்தபோது தாங்கள் மிகவுஞ் செவ்வையான நிலைமையில் இருந்தீர்களே! இப்போது இவ்வளவு மெலிந்த நிலையை அடைதற்குக் காரணம் யாது?' என்று வினவினார். இச்சொற்களைக்கேட்ட அந்நண்பர் மிகமெலிந்த குரலில், ‘ஆம் எத்தனையோ மருத்துவர்களைக் கொண்டு ஆராய்ந்து பார்த்தும், அவர்கள் சொல்லிய எத்தனையோ வகையான உயர்ந்த மருந்துகளை வாங்கி உண்டுபார்த்தும் இந்நோய் தீரவில்லை. இந்நோயின் தன்மையும் மருத்துவர் எவர்க்கும் புலப்படவில்லை.' என்று விடை கூறினார். அதன்மேல், வந்தவர் கூறுவார் ‘ஈது ஏது! மருந்திற்றீராத பொல்லாத நோயாய் இருக்கின்றதே! அன்பிற் சிறந்த உங்களை இந்த நிலையிைற் பார்க்க என் மனம் நீராய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/275&oldid=1626084" இலிருந்து மீள்விக்கப்பட்டது