பக்கம்:மறைமலையம் 3.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
248

❖ மறைமலையம் - 3 ❖



7.கண்ணுங் கருத்தும்

இனி,ஒருவர் உள்ளத்தில் நிகழும் நினைவுகள் அவ்வளவும் அவர் கண்களிற் குறிப்பாய்ப் புலப்பட்டு நிற்குமென்பது எல்லார்க்கும் உடன்பாடாம். இயற்கையாகவே கண்ணோடு சேர்ந்து நிற்குங் கருத்தை, ஒன்றில் முயலுங்கால் அதனோடு பிரிவறச் சேர்த்துவைத்து முயலுதலே நன்றாகும். கண்ணுங் கருத்தும் ஒன்றுபட்டு நிற்கப்பெறுவார்க்குப் பிறரைத் தம்வழியில் நிற்கச் செய்து கொள்ளல் எளிது. கருத்தோடு கூடாத பார்வை எவ்வகைப் பயனையுந் தராது. பிறரைத் தம்வழியில் திருப்புதற்கு முயல்வோர், நினைவைப் பலபடியாய்ச் சிதற விடாது அது கண்ணோடு ஒன்றுகூடி நிற்குமாறு பழக்குதல் வேண்டும். இதற்குச் சில முறைகளை இங்கெடுத்துக் காட்டுகின்றாம்.

ஒரு கண்ணாடியை எதிரே வைத்து அதிற்றோன்றும் தமது முகத்தில் தம்முடைய கண்களையே ஒருவர் சில நேரம் இமைகொட்டாமற் பார்க்கத் துவங்குக. முதற்பழக்கத்திலேயே நடுநேரம் இமைகொட்டாமல் நோக்கினால் கண்களுக்கு நோயுண்டாம்.ஆதலால்,அது வராமைப்பொருட்டு,வருத்தத்திற்கு இடமின்றி மையாற் பார்க்கக் கூடுமட்டும் பார்க்க. அங்ஙனம் பார்க்குங்கால் கருத்து வேறொன்றிலுஞ் செல்லாமல் தமக்கெதிரே கண்ணாடியிற் றோன்றும் தம்முடைய கண்களைப் பார்ப்பதிலேயே ஊன்றி நிற்றல் வேண்டும். அதனோடுகூட, இயலுமாயின் வெற்றித் திறத்தைப்பற்றி நினைதல் நன்று. இவ்வாறு கண்ணுங் கருத்தும் ஒருவழிப்பட நோக்கியபின், இரண்டு கைகளையும் நீட்டி விரல்களை இறுக்கமாய் மூடிப் பின் சடுதியிலே அவ்விரல்களை விரித்துக் கையை உதறிவிட்டு இப்புறம் வருக. இங்ஙனஞ் செய்தலால் மூளையில் வந்துகூடிய உயிரின் நுட்ப ஆற்றல் கையிற் பரவிப், பிறகு வேண்டும் போது கையின் வழியாகப் பயன்படுத்துதற்கு முன்வந்து நிற்கும். கண்ணாடியிற் றோன்றும் தனது வடிவத்திற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/281&oldid=1626091" இலிருந்து மீள்விக்கப்பட்டது