பக்கம்:மறைமலையம் 3.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxviii



நூலுரை

மரணத்தின்பின் மனிதர் நிலை


“மக்கள் வாழ்வின் இயல்புகளையும் அவர்கள் ஒவ்வோர் உலகங்களில் ஒவ்வொருவகையான உடம்புகள் எடுத்து உலவுதலையும் அவர்கள் உலவும் உலகங்களின் தன்மைகளையும் நன்கு விளக்கி உண்மையை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் காட்டுதல் கண்டு பலரும் விரும்பிக் கற்பாராயினர்” எனத்தம் ஞானசாகரக் கட்டுரை ஆர்வமுடன் அறிஞர்களால் ஏற்கப்பட்டது கண்டு நூலாக்கம் செய்கிறார்.

மறுமைநிலையை உள்ளவாறு விரித்துக் கூறும் நூல் ஒன்றேனும் தமிழில் இல்லாமையால் இதனை இயற்றலானேம் என்று தம் முகவுரையில் அடிகள் கூறுகிறார்.

இறப்புக்கு அஞ்ச வேண்டியதில்லை. ஆத்மாவுக்கு அழிவில்லை. உடலுக்கே அழிவு. வாழ்வில் செய்த வினையை எடுத்துக் கொண்டு வேறோர் உடம்பில் புகுகிறது. வேறு உலகும் உண்டு; வேறு உடம்பும் உண்டு என இம்மை மறுமை பற்றிக் கூறுகிறார்.

இந்த உடம்புபோக நான்கு உடம்புகள் கண்ணாடி அடுக்குகள் போல் உள. அவை சூக்குமம், குணம், கஞ்சுகம், காரணம் என்பன. பருவுடல் அழியினும் இந்நான்கு உடம்புகளும் அழியா. அவ்வுடம்புகள் நுண்ணுடம்புகள் ஆதலால் நொடிப்போதில் பல்லாயிரம் கல்செல்லும் தன்மைய. என்பதை அமெரிக்கப் பெண்மணி ஒருவர் நிகழ்வு கொண்டு காட்டுகிறார். பருவுடல் முதல் ஐந்துடலும் ஒத்த தோற்றத்ததாய் இருக்கும் என்பதை அடுத்து விளக்குகிறார்.

பருவுடலும் நுண்ணுடல்களும் உருவ வொப்பு உடையவேனும் வெண்ணிற ஆடை வண்ணிற ஆடை உடையதாய், கையால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/29&oldid=1628563" இலிருந்து மீள்விக்கப்பட்டது