பக்கம்:மறைமலையம் 3.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
261



9. கட்டுரைத்தல்

இனி, மேலேகாட்டிய முறைகள் எல்லாம் கருதிய பயனைத் தருதற்கு உதவியாக அவற்றோடு சேர்த்துச் செயற்பாலதாகிய மற்றோர் இன்றியமையாத முறையும் இருக்கின்றது.அறிதுயிலை வருவிப்போர் அதனை வருவித்தற்கேற்ற சொற்களைத் திறமை யாய் வற்புறுத்திச் சொல்லப்பழகுதல் பெரிதும் வேண்டற் பாலதொன்றாம்.அறிதுயிலிற் செல்வார்க்கு அதனை வருவிப்போர் இங்ஙனம் வற்புறுத்திக் கூறுதலையே கட்டுரைத்தல் (Suggestion) என்று அறிதல் வேண்டும். ஒரு சொல்லைப் பலகால் நினைவு முனைப்போடு திருப்பித் திருப்பிச் சொன்னால் அதனை உற்றுக் கேட்போர் அச்சொல்லின்படியே நடப்பர். இவ்வுண்மையை மனநூல் ஆராய்ச்சியில் தேர்ச்சி பெற்ற அறிஞர்கள் செவ்வையாய் ஆய்ந்து பார்த்து நிலைநாட்டியிருக்கின்றார்கள்.

தலை நோயால் வருந்தும் ஒருவர்க்கு அந்நோய் நீக்கல் வேண்டின், அவரை வசதியாக ஒரு சாய்மானக்குறிச்சியில் அமர வைத்து, நோய் நீக்கும் தம்முடைய கண்களை அவர் உற்றுப் பார்த்த படியாய்த் தாம் சொல்லும் சொற்களைக் கருத்தாய்க் கேட்கும்படி கற்பித்து ‘உமக்குத் தலைவலி இல்லை, அது நும்மை விட்டு அகன்றது, இப்போது நீர் செம்மையாய் இருக்கின்றீர், உமது மண்டை நல்ல நிலைமையிலிருக்கின்றது'. என்று இச்சொற்றொடர்களைத் திருப்பித் திருப்பிச் சொல்லிச் சிறிதுநேரஞ் சென்றபின் அவரது தலையைத் தொட்டுத் தடவி எழுப்பி விட்டால், அவர்க்கிருந்த அம்மண்டை வலி உடனே விலகிப்போதலைப் பார்க்கலாம். நினைவின் வன்மையோடு ஒருவர் அல்லது பலர் அடுத்தடுத்துச் சொல்லுஞ்சொற்கள் பொய்யாய் இருப்பினும் அவை பிறரால் நம்பப்படுதலை முன்னேயும் விளக்கியிருக்கின்றோம். உலகத்திற் பெரும்பாலும் நடைபெறுஞ் செயல்களெல்லாம் பிறர் சொல்லுவனவற்றை நம்புதலாலேயே நிகழ்கின்றன. பிறர்பால் நம்பிக்கையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/294&oldid=1624121" இலிருந்து மீள்விக்கப்பட்டது