பக்கம்:மறைமலையம் 3.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மறைபொருளியல் - 1 ❖
xxix

தொட இயலாததாய் இருக்கும் என்பதற்குப் பலசான்றுகள் மேலை நாட்டவர் குறிப்புவழி காட்டுகிறார். தீய செய்கையர் உடை கரியதாய் கொடியதாய் இருக்கும் என்றும் குறிப்பிடுகிறார். ஆவி வடிவில் இருந்து எழுதுகோல் தானே எழுதுமாறு செய்தலும், நேருக்குநேர் உரையாடலும் நிகழ்தல் கூடும் என்பதை விளக்குகிறார். இவ்வுலகில் ஒருவருக்கொருவர் பேரன்புடனும் தொடர்புகொண்டிருந்தவர் பேரறிவுடனும் அல்லாமல் மற்றையோர்க்கு அவை நிகழா என்றும், உலக வாழ்வில் எதில் மிகு பற்று வைத்தாரோ அதனை நோக்கி மீள உலகுக்கு ஆவி வடிவில் வருதலுண்டு என்று, நல்லதும் பொல்லதுமாம் ஆவிகளின் வரலாறுகளைக் காட்டுகிறார். பழிக்குப் பழிவாங்கல், தீமைக்குத் தீமை செய்தல் என்பவற்றையும் எழுத்து மேலையர் வழிகாட்டுகிறது.

ஒளியாகாய மண்டலம் முதலாக, சனிமண்டில இயற்கை வரை உரைத்து எல்லா மண்டலங்களிலும் உயிர்கள் உண்டு என்று கூறி, வரும் பிறவி பற்றிய நினைவோடு நூலை நிறைவு செய்கிறார். அனைத்தும் மேலை நாட்டவர் குறிப்புகள் கொண்டு தீட்டப்பட்டவையாக உள.

யோகநித்திரை

யோக நித்திரை என்னும் வடசொல்லுக்கு, அறிதுயில் என்பது பண்டே அமைந்த தமிழ்ச் சொல். அதனால் புதிதுவந்து பழகிவிட்ட சொல்லுக்கு விளக்கமாகப் பழந்தமிழ்ச் சொல்லை மீட்டெடுத்து வழிகாட்டுகிறார் அடிகள்.

உறங்குவதாகத் தோற்றம் தரினும் உலகியல் எதனையும் அறியாத் தன்னை மறந்த உறக்கமன்று; அறிந்து கொண்டு உறங்கும் உறக்கமாம் அறிதுயில் என்பது.

திரு.வி.க., மறைமலையடிகள் நூல்களில் தலைப்பும் அத்தலைப்பு விளக்கமும் அமைதலைக் காணலாம்.

“பொருளும் அருளும் அல்லது மார்க்கியமும் காந்தியமும்” என்னும் திரு.வி.க. நூலையும்,

‘மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/30&oldid=1628564" இலிருந்து மீள்விக்கப்பட்டது