பக்கம்:மறைமலையம் 3.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
271

தாங்க வலது கையை அவர் தம் நெற்றிமேல் வைத்துக் கண்களை மூடிக்கொள்ளும்படி அவருக்குக் கற்பித்து, நெற்றியைக் கீழ்நோக்கி மெல்லத் தடவிக்கொண்டே “தூக்கம், நல்-ல-தூக்-கம், அயர்ந்த-தூக்கம், இனி-ய-தூக்கம்” என்று திருப்பித் திருப்பிச் சொல்லுக. இங்ஙனஞ் சிறிதுநேரஞ் சொல்லிய அளவிலே அவர் தூங்கத் துவங்குவர்.

இன்னும் ஒருமுறை: துயில்வோரை வசதியானதோர் இருக்கையில் அமரச்செய்து, காம்பிற்கோத்த ஒருசிறு பளிங்குருண்டையைத் துயிற்றுவோர் தமது கையிற் பிடித்துக் கொண்டு, அதனைத் துயில்வோருடைய கண்களுக்கு நேரே காட்டி அவர் அதனை உற்றுப்பார்க்கும்படி கற்பிக்க. பின்னர் அவ்வுருண்டையை முதலில் மெல்ல வட்டமாய்ச் சுற்றுக. அங்ஙனஞ் சுழற்றுங்கால் துயில்வோர் கண்கள் அவ்வுருண்டையைப் பார்த்தபடியாகவே தாமுஞ் சுழலுதல் வேண்டும். துவக்கத்தில் மெதுவாகச் சுழற்றிய அதனை வரவர விசையாகச் சுழற்றுக. இவ்வாறு இரண்டு மூன்று நிமிடங்கள் சுழற்றியபின், தாழ்ந்த ஒரே வகையான குரலில் “உன் கண் இறைப்பைகள் அலுப்படைகின்றன - உன் கண்கள் அயர்வடைகின்றன - அவை இமைக்கத் துவங்குகின்றன இப்போது நீ தெளிவாய்ப் பார்க்க முடியாது - உன் கண்ணிறைப்பைகள் மூடிக்கொள்கின்றன.” என்று உறுத்தி மெல்லச் சொல்லுக. இவ்வாறு பலமுறை திருப்பிச் சொன்னால் அவர் அயர்ந்து உறங்குவர். இங்ஙனந் திருப்பித் திருப்பிச் சொல்லியும் அவர் உறங்காவிட்டால், “உன் கண்களை இறுக மூடிக் கொண்டு, இப்போது நன்றாய் உறங்கு” என்று வற்புறுத்திச் சொல்லுக.

இன்னும் ஒருமுறை: துயில்வோர் ஒருவரைத் தக்கதோர் இருக்கையில் அமரச்செய்தாயினும், நீளப் படுக்க வைத்தாயினும், அவர்தம் இரண்டு கைகளும் உள்ளவிரல்களில் நடுவிரலையும் மோதிர விரலையும் துயிற்றுவோர் தம்முடைய, கைகளின்மேல் ஏற்றிக்கொண்டு தம்முடைய பெருவிரல்களால் அவருடைய அவ்விரல் நகத்தின் வேர்களை அழுத்துக. அங்ஙனம் அழுத்துவது செவ்வையாயும் ஒரே தன்மையாயும் இருத்தல் வேண்டும். இவ்வாறழுத்துவதும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வகையாய் இருத்தல் வேண்டும். எவ்வெவர்க்கு எவ்வெவ்வகையாய் அழுத்தல் வேண்டுமென்பதை நன்கு தெரிய விரும்பினால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/304&oldid=1625842" இலிருந்து மீள்விக்கப்பட்டது