பக்கம்:மறைமலையம் 3.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
xxx

❖ மறைமலையம்-1 ❖


என்னும் அடிகளின் மற்றொரு நூலையும் காண்க. இவ்வாறு இருவர்தம் பலநூல்களின் பெயர்களும் இருத்தலை நூற்பட்டி கொண்டு அறிக.

அறிதுயில் நம்மவர் வழக்கில் இருந்த கலை எனினும் உலகளாவிய கலை அது என்பதை விளக்கும் வகையால், மேலைநாட்டவர் காட்டும் சான்றுகளையும் தாம் நேரில் கண்ட சான்றுகளையும் மக்கள் வழக்கில் உள்ளவற்றையும் சான்று காட்டியே நூலைக் கொண்டு செல்கிறார்.

இருவகைத்துயில், அறிதுயில், மூச்சு, அமைதி, நரம்பு இளக்கம், நினைவை முனைக்க நிறுத்தல், கண்ணும் கருத்தும், தடவுதல், கட்டுரைத்தல், அறிதுயிலுக்கு ஏற்ற காலம், அறிதுயிலுக்கு ஏற்றவர், அறிதுயிலில் செலுத்தும் முறைகள், மூவகைத்துயில், பயன்படுத்தும் முறைகள், தண்ணீர் மந்திரித்துக் கொடுத்தல் தீய பழக்கங்களை ஒழிக்கும் முறை, தெளிவுக் காட்சி, சில எச்சரிப்புகள் என்னும் 18 தலைப்புகள் வழியே அறிதுயில் நிலையைக் கோவைப்படுத்தும் முறையே நூற்பொருளை நுண்ணிய நோக்கர்க்கு வெளிப்படுத்தி விடுகின்றதாம். அறிவியல் வல்ல ஆய்வாளன் காட்டும் முறைபோல் தாம் தம் செய்நேர்த்தி விளங்க மெய்ப்பிக்கும் திறம் வாய்ந்தமை வெளிப்பட விளக்கமாக்கும் நூல் இது. மனக்கவர்ச்சி, பொருந்தும் உணவு, பொருந்தா உணவு, மக்கள் நூற்றாண்டு உயிர்வாழ்க்கை முதலிய பல நூல்களும் இத்தகையவேயாம். அறியாமை இருளில் நடைபெறும் துயில் ஒன்று. மற்றொன்று அறிவு என்னும் அருளிலே நிகழும் துயில் என்று பகுக்கும் அடிகள்,

‘தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவ தெக்காலம்’

என்பது காட்டி மெய்ப்பிக்கிறார்.

மருள் என்பது அறியாமையைச் செய்வது, அருள் என்பது தூய அறிவு மயமாய் விளங்குவது. பருவுடம்பின்றி உயிர்க்கு அறிவு சிறிதும் விளங்குவது இல்லை. என அறிதுயிலை விளக்குகிறார்.

ஓகத்திற்கு மூலமாம் மூச்சுக் காற்றுப் பயிற்சியை எளிதில் விளக்குகிறார். இப்பயிற்சி கொள்ளும் நேரம், இடச் சூழல் சினம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/31&oldid=1624905" இலிருந்து மீள்விக்கப்பட்டது