பக்கம்:மறைமலையம் 3.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
280

❖ மறைமலையம் - 3 ❖

இறைப்பைகள் ஆடப்பெற்றாரைப் பார்த்து ‘நீர் நும் கண்களை இறுகமூடிக்கொண்டு தூங்கும், என்று சொல்லிவிட்டு விரைந்து அவர்களின் கண் இறைப்பைகளின் மேல் தொட்டேனும் தொடாமலேனும் கீழ்நோக்கித் தடவுக. இதுசெய்தபின் வலதுகைப்பெருவிரலை அவர் ஒவ்வொருவரின் புருவநடுவில் வைத்துச் சிறிது கீழ்நோக்கி அழுத்திக்கொண்டே அவர்களின் வலதுகையைத் துயிற்றுவோர் இடதுகையால் ஒன்றன்பின் ஒன்றாய் மெல்லெனப் பற்றுக இங்ஙனஞ் செய்கையிலேயே தீர்மானமான குரலில் இப்போது உங்கள் - கண்களை - நீங்கள் திறக்க - முடியாது’ என்று அழுத்தமாய்ச் சொல்லுக. இவ்வாறு சொல்லியவுடனே அவர்களிற் பலர் தூக்கத்திலிருந்தாலும் இல்லாவிட்டாலும் தம்கண்களைத் திறக்கமாட்டாமலிருப்பர்; சிலர் அவ்வாறன்றி உடனே கண்களைத் திறந்துவிடுவர்; அத்தகையோர் அறிதுயிலில் எளிதிலே போதற்குத் தகுதியில்லாதவர் ஆகையால், அவர்களையுங் கீழே அனுப்பிவிடுக பிறகு, உறங்குதற்குத் தக்கவராக மேடைமேல் இருத்திக் கொள்ளப்பட்டவர்கட்கு எதிரிலே சிறிது எட்டநின்று கொண்டு எல்லாரையும் உச்சந்தலைமுதற் றுவங்கி அடிமுடிய ஒவ்வொருவராய் இடதுகைப்பக்கத் துள்ளவரிலிருந்து தடவிக்கொண் காண்டு செல்க. முன்னமே இதிற் பழக்கப்படுத்தப் பட்டவர்களும் இடையிடையே இருத்தலால் அவர்கள் எளிதிலே இவ்அறிதுயிலிற் செல்வர். மற்றுப் புதியோர் விரைவில் தூங்காவிட்டால், ஒவ்வொருவரையும் கண்களின் மேலும் கன்னப் பொட்டுகளின் மேலும் விரைந்து கீழ் நோக்கிப் பலகால் தடவுக. இங்ஙனங் கால்மணிநேரம் விடாதுசெய்தால் அவரும் அயர்ந்த உறக்கத்திற்கு ஏகுவர், தொடக்கத்தில் ஒவ்வொருவர் கையினும் வைத்த வெள்ளிக் காசுகளை எடுத்துக்கொள்க.

துவக்கத்தில் வெள்ளிக்காசு முதலான பளிச்சென்ற பொருள்களை வைத்து அவற்றை உற்றுநோக்கச் செய்தலைவிட, ஒவ்வொருவரும் தமது இடது கைப்பெருவிரலை வலது உள்ளங்கையில் வைத்து இறுகப் பற்றிய படியாய்க் கண்களை நன்றாய் மூடிக் கொள்ளுமாறும் செய்தல் நன்று. இங்ஙன மெல்லாஞ் செய்து சிலரையேனும் பலரையேனும் அன்றி ஒருவரையேனும் துயிற்றுதற்கு முயலுங்கால் துயிற்றுவோர் தமது நினைவைப் பலமுகமாய்ச் சிதற விடாது, எல்லார்க்குந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/313&oldid=1626111" இலிருந்து மீள்விக்கப்பட்டது