பக்கம்:மறைமலையம் 3.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
283

0.165கொடுமை தணியப் பெறுகின்றனர். என்றாலும் இத்துயிலில் நினைவு மாறாம லிருத்தலால் துயிற்றுவோர் சொல்வனவுஞ் செய்வனவும் எல்லாம் துயில்நீங்கி எழுந்தபின் ஏறக்குறைய நினைவுக்கு வரும் என்க.

இனி, மேற்சொல்லிய நினைவுத் துயிலினும் ஆழ்ந்து செல்லும் துயிலில் உயிருக்கு நினைவு சிறிதும் நிகழாமையால் அதற்குப்பின் உண்டாம் இது நினைவற்ற துயில் எனப் பெயர் பெற்றது. இத்துயிலின்கண் இருப்போர்க்குச் சுற்றியுள்ள பொருள்களின் உணர்ச்சி சிறிதும் இராது; புறத்தே தோன்றும் ஓசை எவ்வளவு பெரியதாய் எவ்வளவு கொடுமையானதாய் இருப்பினும் அதனை அவர் சிறிதுங்கேளார். துயிற்றுவோருடைய சொற்களையுங் குரலொலியையுந் தவிர வேறொன்றனையும் அவர் உணரார் விழிகள் சுழலாமல் அமைதியுற்றிருக்கும். முன்னே காட்டிய நினைவுத் துயிலிற் சென்றவரோ திடுக்கிடத்தக்கது எதனையேனுங் ங் கேட்டபின் அதனினின்றும் உடனே விழித்தெழுவர்.

ஆனால், இந்நினைவற்ற துயிலிற் சென்றவரோ எத்தகைய ஓசையானும் திடுக்கிட்டு எழார். அவருடைய முகங் கை கால் முதலான உறுப்புகளை எந்த நிலையில் துயிற்றுவோர் வைக்கின்றனரோ அந்த நிலையிலேயே அவை நிற்கும். அவரை நோக்கித் துயிற்றுவோர் ஏதேனும் அடுத்தடுத்து வினவினால் மட்டும் அவர் அதனை அரைவாசியுணர்வோடு கட்டாயத்தினால் விடை கூறுவர்; அங்ஙனம் விடை கூறியபின் மறுபடியும் அவ்வாழ்ந்த தூக்கத்தின் கண்ணேயே அமைதியாய்ச் சென்றிருப்பர். இந்நிலையில் உடம்பினிடத்தே உணர்வு சிறிதும் இல்லாமையால், உடம்பில் ஆழமாக அறுத்துச் செய்யவேண்டிய முறைகளைச் செய்தற்கு இதுவே மிகவும் ஏற்றதொரு நிலையாகும் இதற்குமுன் நிகழும் துயிலில் நினைவு பழுதுபடாமலிருத்தலால் அதன்கண் உடம்பின் எவ்விடத்தையேனும் ஆழ அறுத்தலால் உடனே ஒருவர் திடுக்கிட்டு எழுந்திருத்தலுங் கூடும். மற்று இதன்கண் எவ்வளவு ஆழமாக உடம்பை அறுத்தாலும், அல்லது கை கால் முதலிய உறுப்புகளை வெட்டி யெடுத்தாலும் இத்துயிலின்கட் சென்றோர் அவற்றைச் சிறிதும் உணரார். இக்கல்விப் பழக்கத்தால் நோயாளிகள் பலர்க்குப் பொறுத்தற்கரிய நோய்கள் பலவற்றை நோயின்றித் தீர்த்த வெள்ளைக்கார

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/316&oldid=1626116" இலிருந்து மீள்விக்கப்பட்டது