பக்கம்:மறைமலையம் 3.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
288

❖ மறைமலையம் - 3 ❖


‘அறுத்த பின்பு ஏதாவது உண்டனையா அல்லது பருகினையா?' 'நான் விடாய் கொண்டிருந்தேன்; ஆனால், நாட்டு மருத்துவர் என்னை எழுப்புகிற வரையில் நான் பகருகுவதற்கு ஏதும் கிடைக்கவில்லை.’

‘யாராவது உன்னை ஊசியாற் குத்தினார்களா?’ ‘அல்லது நெருப்பாற் சுட்டார்களா?’ ‘இல்லை, இல்லை.’

‘உனக்கு வெறுப்பான எதனையேனும் முகந்தனையா?’

‘இல்லை.’

‘நீ தூங்கும்போது இன்பமாய்த் தூங்கினையா?' ‘மிகவும் இன்பமாய்த் தூங்கினேன்.’

'நீ தூங்கியபோது ஏதேனும் ஓசை கேட்டனையா?” ‘குரல் ஒலிகள் கேட்டன, ஆனால், அவைகளை நான் திட்டமாய்த் தெரிந்து கொள்ளக்கூடவில்லை.'

‘மருத்துவக் கழகத்தில் என்னைத் தவிர வேறு எவரையேனும் பார்த்தனையா?’ ‘இல்லை’.

‘நீ தூக்கத்திற்குப் போனபிறகு உன் வீங்கிய விதையில் ஏதேனும் நோவிருந்ததா?’ ‘நான் எழுந்திருக்கும் வரையில் நோவேயில்லை.’

‘அந்த இடத்தில் இப்போது ஏதேனும் நோவிருக்கிறதா?’ ‘மிகச் சிறியநோவுதான் இருக்கிறது’.

‘இன்றைக்கு உனக்கு எத்தனைமுறை வயிறு போயிற்று?’ ‘மருத்துவக் கழகத்திற்கு வரும்முன் நான்கு முறை போயிற்று, அதன்பிறகு ஒன்றுமில்லை. முன்னே இருந்ததைவிட இப்போது என்வயிறு இலேசாய் இருக்கின்றது’.

இங்ஙனம் அவ்வெள்ளைக்கார மருத்துவர் விதை வீங்கின நோயாளி ஒருவனை நினைவற்ற ஆழ்ந்த துயிலிற் போகச் செய்து அவன் விதைகளை அறுத்து நலப்படுத்தியபின் அவனைத் தக்கோர் பலர்முன்னிலையில் வைத்து மேற்காட்டியவாறு கேட்டுப் பெற்ற விடைகளிலிருந்து, இத்தகைய தூக்கத்திற் சென்றோர்க்கு எவ்வகையான துன்பமும் தெரிவதில்லை யென்றும், அத்தூக்கத்திற் சென்று எழுந்தபின் நோய் நீங்கி நலம் உண்டாமென்றும் அவருடனிருந்தோரெல்லாரும் தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/321&oldid=1626553" இலிருந்து மீள்விக்கப்பட்டது