பக்கம்:மறைமலையம் 3.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
300

❖ மறைமலையம் - 3 ❖

காற்றை உள்ளிழுத்தே ஊதவேண்டுமாதலால், வாயை அந்நோயுள்ள இடங்களில் வைத்தபடியாகவே மூச்சை es உள்ளிழுத்தல் சிறிதும் ஆகாது. முகத்தைத் தூயகாற்றுவரும் அப்பக்கமாய்த் திருப்பி மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு மறுபடியும் ஊதுக. 'இந்நோய் தீர்தல்வேண்டும்' என்னும் எண்ணம் முனைத்து நிற்க இங்ஙனம் ஊதுவதால் நோய் தீர்ப்போரது எண்ணத்தால் உந்தப்படும் மின் ஆற்றல் அவரது மூச்சின் வழியோடி நோயாளிக்குள்ள அந்நோய்களை விலகச் செய்யும். இவற்றோடு 'இந்நோய் உம்மைவிட்டு - அகன்றது. உமது உடம்பினுள்ளே தூய இரத்தம் பரவுகின்றது. உம்முடைய நரம்புகள் வலிவடைகின்றன. நீர் -உள்ளக் கிளர்ச்சி - உடையவராகின்றீர். நீர் -இத்துயிலில் - நன்றாய்த் - தூங்கி - எழுந்ததும் - உமது உடம்பு செவ்வையாகவும் - உமது உள்ளம் கிளர்ச்சியாகவும் இருக்கக் காண்பீர்,' என்று பலகால் ஆழ்ந்த மெல்லிய குரலில் திருப்பித் திருப்பிச் சொல்லுக. இவ்வாறெல்லாம் செய்து, அவரை நன்றாய்த் தூங்கி எழும்படி கற்பித்து விட்டுப் போனால்,அவர் அவ்வாறே அயர்ந்துறங்கி எழுந்து, தமக்கிருந்த நோய் நீங்கிப்போகக் கண்டு வியந்து மகிழ்வர்.

மேலெடுத்துக் காட்டிய சிறு நோய்களெல்லாம், மேற்கூறிய முறைப்படி ஒரு பொழுது அல்லது இரண்டு மூன்றுபொழுது செய்த அளவானே நீங்கும். நாட்பட்ட குளிர் காய்ச்சல், நச்சுக் காய்ச்சல், சளிக்காய்ச்சல், வயிற்று வலி, குண்டிக்காய் வலி, ஈரல் வலி, நெஞ்சடைப்பு, படை, புண், தொழுநோய், பொருத்துப் பிடிப்பு, என்புருக்கி, மண்டைக்குடைச்சல், பிளவை, இருமல் முதலான கடு நோய்களுக்கோ சிலகால் மேற்கூறிய முறைகளைச் செய்தல் போதாது. பலநாளும் பலகாலும் மேற்கூறிய முறைகளைத் தொடர்பாகச் செய்துவரல் வேண்டும். நோய் நீக்குவோர்க்கு அந்நோய்கள் தொற்றிக்கொள்ளாதபடி அவர் தம்மைத் தூய்மை செய்து கொண்டு மூச்சுப் பயிற்சி செய்துவரல் வேண்டும். இக்கடு நோய்கொண்ட நோயாளிகட்குத் தீனிக்குடல், மலக்குடல், வியர்வைத் துளைகள் முதலியவற்றை அடிக்கடி கழுவித் துப்புரவு செய்தலோடு, தூயவுணவும் தூயநீருங் காற்றும் உட்கொள்ளும்படியும் செய்தல் வேண்டும்.இன்னும் நல்ல மருந்துகள் உட்கொடுத்தற்கும் பின் வாங்கலாகாது. அது நிற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/333&oldid=1626196" இலிருந்து மீள்விக்கப்பட்டது