பக்கம்:மறைமலையம் 3.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
310

❖ மறைமலையம் - 3 ❖



15. தண்ணீர் மந்திரித்துக் கொடுத்தல்

னி, உள்ளே பருகுதற்காவது, வெளியே உடம்பிற் றெளித்துக் கொள்ளுதற்காவது, அல்லது தலைமுழுகுதற்காவது தண்ணீர் மந்திரித்துக் கொடுக்கும் வழக்கம் நம்மனோருள்ளுங் காணப்படுகின்றது. அயல்நாடுகளிலுள்ள வண்மக்கள் இம்முறை நோய் நீக்குதற்குப் பெரிதும் உதவுதலை நன்கு ஆராய்ந்து பார்த்து இதனையுங் கைக்கொண்டு வருகின்றார்கள். அறிதுயில் முறைகளிற் பழகித் தேர்ச்சி பெற்ற ஒருவர்க்கு நினைவாற்றல் நிரம்ப வலிவேறி நிற்குமாதலால், அந் நினைவாற்றலால் உந்தப்படும் அவரதுடம்பிலுள்ள மின்சத்து அவர்தங் கண்களின் வழியாகவும் சொற்களின் வழியாகவும் விரல்நுனிகளின் வழியாகவும் புறத்தே ஓடிப் புறத்துள்ள பொருள்களையும் உயிர்களையும் இயங்குமாறும் இயங்காமல் வறிதே இருக்குமாறும் செய்து விடுகின்றது. இந்நாவலந்தீவிலும் நினைவாற்றல் மிகுந்துள்ளோர் பலருளர்.

அவர் தம்மை வழிபட்டாரை வாழவும், தம்மைப் புறம்பழித்தாரைச் சாவவுஞ் செய்த உண்மை வரலாறுகள் ஆங்காங்குள்ளார்க்குத் தெரியாமல் இரா. தொழு நோய் காண்டும், ஈளை முதலிய கொடுநோய்களால் வருந்தியும் வந்த சிலர் அத்தகைய பெரியாரை எதிர்ப்பட்டு அவர் தந் திருநோக்கந் தம்மேற் பட்ட அளவானே அந்நோய் தீரப்பெற்றிருக்கின்றனர். வேறுசிலர் அவரைப் பழித்துத் தீது செய்தமையானே அவரால் வையப்பட்டுத் தாமும் தங்குடும்பமும் வேரோடு அழிந்து போயினர். நீராவி வண்டியிற் சென்ற அத்தகைய பெரியாரை அறியாமல் அவரைக் கீழ்இறக்கி விட்டமையானே, அவர் அவ்வண்டி ஓடாமையில் நிற்கச்செய்த நிகழ்ச்சிகளும் பின்னர் அவரை வேண்டி இரந்தமையானே அவர் இரங்கி அவற்றை ஓடச்செய்த நிகழ்ச்சிகளும் இந்நாட்டின் கணுள்ளார் பலர் நேரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/343&oldid=1624173" இலிருந்து மீள்விக்கப்பட்டது