பக்கம்:மறைமலையம் 3.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
314

❖ மறைமலையம் - 3 ❖



16. தீயபழக்கங்களை ஒழிக்கும்முறை

L

இனி, மேற்பிறவிகளில் இடையறாது பழகிய பழக்கத்தாற் பலர் பிறக்கும்போதே அப்பழக்கத்தின் பயனாகச் சில தீய தன்மைகளை யுடையராய்ப் பிறந்து, வளர்ந்து, நாளேற நாளேற, அத்தன்மைகளுக்கு ஒத்த தீய செயல்களைச் செய்து, தம்மையுந் துன்புறுத்திப் பிறரையுந் துன்புறுத்திப் பிறவிப்பயனை வீணாக்கி மாய்ந்து போகின்றனர். இவர் பிறக்கும்போதே இத்தகைய தீய இயற்கைகளை உடன் கொண்டுவந்து, பின்னர் அவை வேரூன்றி வளர்தற்கேற்ற தீயோர் சேர்க்கையால் உரங்கொண்டு முற்ற, அதன்பின் எவரானும் மாற்றுதற்கு ஏலாத கொடியோராய் உலகிற்குப் பல பெருந் தீங்குகளை இழைத்து மாள்கின்றனர். இத்தன்மையோரைத் திருத்துதற்கு அரசனும் அவனால் ஏற்படுத்தப்பட்ட சிறைக்களம் முதலான கருவிகளும் பண்டு தொட்டு உலகின்கண் மிகுந்திருந்தும், இவரைத் திருத்தி நல்வழிப்படுத்துவது முடிந்தபாடாயில்லை. சட்டத்துக்கு மாறாகவே துணிந்து நடப்போர் பலராகச், சட்டத்தின் பிடிக்கு அகப்படாத தீநெறிகளில் ஒளிந்தும் ஒளியாமலும் நடப்போர் பலப்பலர். உள்ளடங்கி எரியுந் தீயை ஒரு பக்கத்தில் மூடினால், அது மற்றொரு பக்கத்தில் எரிந்து வெளிப்படுதல் போலவும், நிலத்தினுள்ளே வேரின் உரம் நிரம்ப உள்ள ஒரு முண்மரத்தை மேலே எவ்வளவுதான் வெட்டினாலும் அது மேலும் மேலும் தளிர்த்தல் போலவும், மக்கள் உள்ளத்தே படிந்து மேன்மேல் வலுவாய் வளரும் பொல்லாங்கைச் சுவடறத் துடைத்தற்கு இசைந்த வழித் துறைகளைத் தேடாமற், புறத்தே எவ்வளவு கொடுமையான சட்டதிட்டங்களைச் செய்து வைத்தாலும், அவற்றால், தீய இயல்புள்ளோர் திருந்துவர் என்று கனவிலும் நினைத்தல் வேண்டாம். அகத்தே ஊறிய நஞ்சை, அகத்தே சென்று உரிஞ்சும் மருந்தே மிக்கவல்லதாகும். அதுபோற், புறத்துச் செல்லும் உணர்வுகளை மடக்கி, அகத்துச்சென்று புதையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/347&oldid=1624177" இலிருந்து மீள்விக்கப்பட்டது