பக்கம்:மறைமலையம் 3.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
340

❖ மறைமலையம் - 3 ❖

மனநூலோ ‘நீ மொழிந்தது பொய், ஏனென்றால், இந்த மண்ணுலகமானது சுழன்றுசெல்லுங் காலம்வரையும் சிறந்த வெள்ளமாய்ப் புரண்டோடுஞ் செழும்புனல் உள்ள இடம் துவென்று நான் குறித்துக் காட்டுகின்றேன் எனக் கூறிற்று. கி.பி. 1864ஆம் ஆண்டுமுதல்; சிக்காகோ நகரத்தில் எடுக்கப்பட்ட இந்தத் துளைக்கிணற்றிலிருந்து நாள் ஒன்றுக்கு ஏழரை இலக்கம் மரக்கால் தண்ணீர் விழுக்காடு மேலோடி வருகின்றது. மேலும், இத்தண்ணீரைக் குளங்களினும் மிகப் பெரிய தொட்டிகளினுங் கொண்டு போய் நிரப்பிக் கட்டிவைத்து, மழை காலத்தில் சிறிதேறக் குறைய நானூற்றெழுபத்தாறு மணங்கு பனிக்கட்டி செய்து விற்றுச் செட்டுப் பிடிக்கின்றார்கள். இன்னும் இப்பனிக்கட்டியை வேண்டும்போது நான்கு மடங்காக்கியும் விற்கலாம்.” எவரும் மறுத்தற்கு இயலாது, அமெரிக்க மக்களின் கண்ணெதிரே நிகழ்ந்த இவ்வுண்மை நிகழ்ச்சியினால், மக்களின் முகத்தேயுள்ள புறக்கண்களுக்குப் புலனாகாமல் இந் நிலப்பரப்பின் மேலுங் கீழும் நெடுந்தொலைவில் மறைந்து கிடக்கும் எவ்வகைப் பொருள்களும் அவர் தம் அகக்கண்ணின் எதிரே இனிது விளங்கித் தோன்றுதலும், அத் தோற்றத்தினுதவியால் முயன்று அவற்றைப் புறக்கண்களுங் காணும்படி செய்து அக்காட்சியின் உண்மையைத் தெளிந்து பயன் பெறுதலும் உண்டென்பது நன்கு துணியப்படுகின்றதன்றோ?

இனி, இத் தெளிவுக்காட்சியின் உதவியாற் காணாமற் போன பண்டங்களையும் கண்டெடுக்கலாம் என்பதற்கு உண்மையாய் நிகழ்ந்த மற்றொரு நிகழ்ச்சியை, இத்துறையில் மிகவல்லரான மற்றோர் ஆசிரியரது நூலிலிருந்து (How to thought - read by Dr. James Coates, Ph.D., F.A.S.) எடுத்து ஈண்டு மொழிபெயர்த்து வரைகின்றாம்: - “தியடோர் என்னும் ஒரு நீராவிக் கப்பல் பிளாண்டு என்னும் மற்றொரு கப்பல் இலிவர்பூல் என்னுங் கடற்றுறை பட்டினத்தைச் சேர்ந்த அன்றைக்கே வந்து சேர்ந்தது. அஃது எங்களுடைய கப்பலைப் பார்க்கிலும் பெரியது; என்றாலும் அதன் கண் உள்ள சரக்கும் எங்கள் கப்பலில் உள்ளதைப் போன்றதே. ‘எல்லாம் செவ்வையாக இருக்கின்றன’ என்று தெரிவிக்கும் பொருட்டாக நான் உடையவர்களிடம் சென்ற அன்றைக்கு, மீகான் மார்ட்டன் என்பவரை மிகவுங் கலவரமான நிலைமையில் எதிர்ப்பட்டேன்; ஏனென்றால், தமது சம்பளமும் தம்மோடு வேலைபார்ப்பவர் சம்பளமுஞ் சேர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/373&oldid=1626596" இலிருந்து மீள்விக்கப்பட்டது