பக்கம்:மறைமலையம் 3.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
344

❖ மறைமலையம் - 3 ❖

ஒருவர் அதனைப் பொருத்துப் பிடிப்பு என்றார்; கடைசியாக ஒருவர் முதுகெலும்பு மிகவும் அழுகிப் போயிற்று என்றார்.”

“உவில்ட் என்பவரின் நேயர், முன்னதாகச் செய்து கொண்ட ஏற்பாட்டின்படி அவரை வந்து கண்டு, மேற்சொல்லிய பெருமாட்டியாரையும் பார்த்தார். இந்த அம்மையார் சும்மா அவரை உற்று நோக்கினார். அதன் பின், அவர் அவ்வறையை விட்டுச் சென்ற பின், அந்த அம்மையார் அம்மருத்துவரை நோக்கிப் பின் வருமாறு கூறினார்: ‘அஃது எத்தகைய நோய் என்பதை யான் கண்டு கொண்டேன். அவருடம்பு பளிங்கு போற்றெளிவாய் இருந்ததென்ன யான் அதனை அவ்வளவு விளக்கமாய்க் கண்டேன். அவரது நெஞ்சப்பைக்குப் பின்னே கடுக்காய் அளவினதாகிய ஒரு கட்டி புறப்பட்டிருக்கின்றது; அஃது அழுக்கு நிறமுடையதா யிருக்கின்றது; அது உடைந்து போகும் போல் ஆடுகின்றது.முற்றிலும் ஓய்வாயிருப்பதைத் தவிர வேறெதுவும் அவர்க்கு நன்மை செய்யாது.’

“அதன் மேல் உவில்ட் என்பவர் கூறியதாவது: ‘அவ்வம்மையார் கருதிச் சொன்னது இதுவென யான் உடனே கண்டேன். ஆகவே அதனைப் பின்வருமாறு என் நண்பரின் மருத்துவருக்கு எழுத உட்கார்ந்தேன்; என் நண்பருக்குள்ள நோயின் தன்மை இன்னதென்று கண்டு கொண்டேனென நம்புகின்றேன். இறக்கத்தில் உள்ள செந்நீர்ப்பையில் அவர்க்கு ஒரு வீக்கம் ஒரு கடுக்காயளவு இருக்கின்றது. இதுதான் நஞ்சப்பையிற் காணப்பட்ட சிறிது இடப்பெயர்ச்சியை உண்டாக்கியதாகும்; இக்கட்டியானது விலாவெலும்புகளின் இடையிலுள்ள நரம்புகளை நெருக்குதலால் முதுகிற் பருநோயும் மார்பின் முன்புறத்துள்ள தோலின் கண் நோயும் உண்டாகின்றன. நாளைக்கு நீங்கள் பார்க்கச் செல்லும் மருத்துவருக்கு, யாமறிந்த இந்நோயின் நிலையைத் தெரிவித்து, அவர் சொல்வது இன்னதென்று எனக்கு அறிவியுங்கள்.

“அங்ஙனமே அந்நோயாளி அந்த மருத்துவரிடந் தெரிவித்ததில் அப்பெருமாட்டி அந்நோயைப் பற்றிக் கூறியதுதான் உண்மையென உறுதிப்படுத்தப்பட்டது. அதனோடு அந்நோயை நீக்குதற்குச் செய்ய வேண்டுவதும் முற்றும் ஓய்ந்திருத்தலேயாமென்பதும் மருத்துவர் எல்லாரானும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/377&oldid=1627035" இலிருந்து மீள்விக்கப்பட்டது