பக்கம்:மறைமலையம் 3.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
346

❖ மறைமலையம் - 3 ❖



உள்ள.

18. சில எச்சரிப்புகள்

அவற்றுள்,

மேலெடுத்துக் காட்டியவாறு அறிதுயிலைப் பிறர்பால் வருவித்து, அதனுதவியாற் பல உயர்ந்த நன்மைகளை விளைவிக்க வேண்டுபவர்கள், இதனைப் பயிற்சி செய்கின்ற போது கட்டாயமாய்க் கருத்திற்பதித்து நடக்கவேண்டிய குறிப்புகள் சில முதலாவது, ஒருவரை அறிதுயிலிற் செலுத்துகின்றபோது துவக்கத்திலேயே பின்வருமாறு சொல்லி அவரைத் தமது கட்டளைக்கு உடன்படுத்திக் கொள்ளக்கடவர்: "இப்போது உம்மை அறிதுயிலுக்குச் செலுத்தப் போகின்றேன். உம்மை அறிதுயிலிற் செலுத்துவது உமக்கும் உமக்கும் எனக்கும் உலகத்திற்கும் நன்மையை உண்டாக்குதற் பொருட்டேயாம். ஆதலால், என் கட்டளைப்படி நீர் அறிதுயிலிற் சென்று, அத்துயிலில் இருக்கையில், யான் சொல்லுகிறபடியே செய்து, திரும்ப யான் அதனினின்றும் உம்மை விழிக்கச் சொல்லுகையில் என் கட்டளைப்படியே உடனே விழித்து எழக்கடவீர். என் கட்டளைப்படி யெல்லாம் உள்ளடங்கி நடக்கக்கடவீர்”. என்று வலியுறுத்திச் சொல்லி, அதன்பிறகு அவர் அறிதுயிலிற் செல்கையிலும் இடையிடையே மேற்கூறியவாறு கட்டுறுத்திச் சொல்லுக.

66

இரண்டாவது: அவர் அறிதுயிலில் இருக்கையில், நன்மையான சொற்களையே தெளிவாய் வலியுறுத்திச் சொல்லுக. மறந்துந் தீமையான சொற்களைச் சொல்லற்க. உமது உடம்பு மிகவும் நன்றாய் இருக்கின்றது. உமது அறிவு மிகவும் தெளிவாயிருக்கின்றது. உமது மூளையும் நுரையீரல் நெஞ்சப்பை தீனிப்பை மலக்குடர் முதலான அகக்கருவிகளும் மிகவுஞ் சவ்வையான நிலையில் இருக்கின்றன. நீர் எப்போதும் நல்ல நினைவும் நல்ல எண்ணமும் உடையவராயிருப்பீர். நீர் என்றும் நல்ல செய்கைகளையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/379&oldid=1624209" இலிருந்து மீள்விக்கப்பட்டது