பக்கம்:மறைமலையம் 3.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
348

❖ மறைமலையம் - 3 ❖

ஒழுங்கான நிலையில் இருக்கின்றன தெனவுங் கற்பித்து, அவரை விழிக்கச் செய்வதற்கு மறந்துவிடலாகாது.

ஐந்தாவது: துயிற்றப்பட்டவர் அறிதுயிலில் இருக்கும் போது அவரிடம் ஏதேனுங் கேட்கவிரும்பினால் ‘நீர் இப்போது செவ்வையாக இருக்கின்றீரா? நீர் ஏதாவது இம்முறைக்கு எனக்கு அறிவிக்கக்கூடுமா?’ என்று கேட்க வேண்டுமே யல்லால் ‘நீர் செவ்வையா யிருக்கின்றீர் என்று நினைக்கின்றேன், யான் செய்யவேண்டியமுறை இன்னதென்று அறிவியும்’ என்று கட்டளையிட்டுக் கேட்டலாகாது. ஏனெனில், அறிதுயிலில் இருக்கையில் துயிற்றுவோர் ஏது கட்டளையிடுகின்றாரோ அக்கட்டளைப்படியே துயில்வோர் செய்வர்; கட்டளையிடாமற் கேட்டால் அவரது உள்ளத்தில் அப்போது இயற்கையாகத் தோன்றுவனவற்றை உரைப்பர். அவற்றைக் கேட்டு உண்மையின்னதென்று உணர்ந்து அதற்கேற்பச் செய்வனவற்றைச் செய்யலாம்.

ஆறாவது: மூவகையான அறிதுயிலிற் செலுத்தப்பட்டோரையும் அத்துயிலினின்றும் எழுப்ப வேண்டுங் காலத்தில் எழுப்பிவிடுதற்குச் சிறிதும் மறந்து போகலாகாது. ஒருவருக்கு வரும் அறிதுயிலானது இறைவனது திருவருளின்பத்தில் நிகழ்வதாதலால், அவர் அவ்வின்பத் துயிலினின்றுஞ் சடுதியில் விழித்தெழ விருப்பம் இல்லாதவராய் இருப்பர். அதுபற்றி மனந்தடுமாறி உள்ளங் கலங்கல் வேண்டாம். நீவிர் வேண்டும் போது விழித்தெழ அவருக்கு விருப்பம் இல்லையானால் ‘எவ்வளவு நேரந் துயில விரும்புகின்றீர்?’ என்று அவரையே வினாவுக. இரண்டுமணி நேரம் மூன்றுமணி நேரந் தூங்கல் வேண்டுமென விரும்புவராயின் அங்ஙனமே அவரைத் தூங்கவிடுக. இன்னும் பல மணிநேரந் தூங்கல் வேண்டும் என்பராயின், அதற்கு இசைய இயலாவிட்டால் ‘அவ்வளவு நேரங் கூடாது, இன்னுங் குறையச் சொல்லும், இன்னுங் குறையச் சொல்லும்’ என்று சொல்லி அவரை வரவர இணக்கிக் காண்டுவந்து அரை, அல்லது ஒன்று, அல்லது ஒன்றரை, அல்லது இரண்டு மணி நேரம் வரையில் ஏற்குமாறு தூங்கவிட்டு, அதன்பின் இரண்டு கைகளையும் நீட்டி, உள்ளங்கைகளையும் விரல்களையும் மேல் நோக்கித் திரும்பிக், கடைச் சிறுவிரல் தவிர, ஏனைவிரல்களைச் சேர்த்தபடியாய் அவரது அடியிலிருந்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/381&oldid=1627535" இலிருந்து மீள்விக்கப்பட்டது