பக்கம்:மறைமலையம் 3.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
349

தாயினும் முழங்காலிலிருந்தாயினும் மேல்நோக்கி முடிவரையில் தொட்டேனுந் தொடாமலேனும் பலகால் தடவி, அவர்தம் நெற்றிமேலுங் கண்ணிறைப்பைகளின் மேலும் வாயினால் மென்காற்றுண்டாக ஊதி ‘விழித்துக் கொள்க’ என்றால் விழித்துக்கொள்வர். அங்ஙனம் விழிக்கையிற் கண்ணிறைப்பைகளைத் திறக்க மாட்டாமற் சிறிது வருந்து வராயின், அவரை இரண்டொரு நிமிடம் சும்மா இருக்கவிட்டு அதன்பின் ‘கண்ணைத் திறந்துபாரும்’ என்று கட்டளையிட்டால் அவர் விழித்துக்கொள்வர். அல்லது, யான் இருபது எண்ணியவுடன் விழித்துக்கொள்வீர் என்று சொல்லிக் கைகளை மேனோக்கித் தடவுகையில் ‘ஒன்று - இரண்டு - மூன்று’ என்று ஆழ்ந்த குரலிற் சொற்லிக் கொண்டே சென்று இருபது முடிந்ததும் ‘இப்போது நீர் விழித்துக்கொள்ளக் கடவீர்’ என்று கட்டளையிட்டுக் கையைத் தட்டினால் உடனே விழித்துக் கொள்வர்.

என்று இதுகாறும் யோகநித்திரை என்னும் அறிதுயிலாகிய அருங்கலைத்திறம் இனிது விளக்கப்பட்டது. இவ்வருமருந்தினும் உயர்ந்த கலையைப் பழகி உலகத்தவர் நலம் பெறுக!


யோகநித்திரை என்னும் அறிதுயில்
–முற்றும்–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/382&oldid=1627537" இலிருந்து மீள்விக்கப்பட்டது