பக்கம்:மறைமலையம் 3.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
21



3. சூக்குமசரீர யாத்திரை செய்த ஒருவர் சரித்திரம்

அமெரிக்கா தேசத்திலுள்ள ஒரு பெண் தன் கணவன் வியாபார காரியமாகத் தூரதேசம் போய்விடத் தான் பல வருடங்கள் தனிமையிருந்தனள்; அவள் கணவன் அவளை விட்டுப் பிரிந்துபோன சில வருடங்களாக அவளுக்குக் கடிதங்கள் அனுப்பிவந்தான்; பிறகு திடீரென்று அவனிட மிருந்து கடிதம் இன்றுவரும், நாளை வரும் என்று எதிர்பார்த்த வண்ணமாய் இரண்டொரு வருடங்கள் கழித்தாள்; பின்னுங் கடிதம் வந்திலது; அதனால் அவள் மனம் சகியாதவளாய் மிகவும் வருந்திக் கப்பல் யாத்திரை போய் வருவார் பலரையும் உசாவித் தன் கணவன் இருக்குமிடம் தெரிவிக்கும்படி வேண்டினாள்; அவர்களெல் லாரும் அவள் கணவனிருக்குமிடந் தெரியாதென்றே சொல்லி விட்டார்கள். அனலிற்பட்ட புழுப் போல் துடிதுடித்துத் தன் நேசர்கள் பலரிடம் போய் 'யான் என்செய்வேன்! என்செய்வேன்!' என்று பதறியழுதாள். அப்போது அவர்களுள் ஒருவர் இன்னாரிடம் போய்க் கேட்பையானால் அவர் உன் கணவனிருக்குமிடம் அறிவிப்பர் என்று அவளை ஒரு பெரியவரிடம் அனுப்பினார். மனித சஞ்சாரம் மிகுதியாயில்லாத ஒரு தனியிடத்தில் வசித்துக் கொண்டிருந்த அப் பெரியவரிடம் போய் அந்தப் பெண் தன் குறையை அறிவித்தாள். அப் பெரியவரும் அந்தப் பெண்ணைப் பார்த்து மனம் இரங்கி “அம்மா, நீ இவ்விடத்திலேயே இரு, நான் அந்த அறைக்குள்ளே போயிருந்து திரும்பிவந்து உனக்கு உன் கணவனைப்பற்றித் தெரிவிப்பேன்; நான் வரும் அளவும் நீ எவ்வகையான சப்தமுஞ் செய்யாமல் இங்கேயே இரு,” என்று அங்கே ஓர் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தித் தாழிட்டுக் கொண்டார். இந்தப் பெண் சிறிது நேரம் அங்கே காத்திருந்து பார்த்தும் அவர்

ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/54&oldid=1623642" இலிருந்து மீள்விக்கப்பட்டது