பக்கம்:மறைமலையம் 3.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
26

❖ மறைமலையம் - 3 ❖



5. சூக்கும உடம்பின் வடிவு

இனி இந்தச் சூக்கும சரீரத்தின் வடிவம் தூலசரீரத்தின் வடிவத்தையே பெரும்பாலும் ஒத்திருந்தாலும், அது மேலே போர்த்திருக்கும் ஆடை மிகவும் வெண்மையாய் மெல்லிய தாயிருக்கும். ஆனாலும், சூக்குமசரீரத்தின் அம் மெல்லிய வெள்ளாடையானது கண்ணுக்கு மாத்திரம் தோன்றுமே அல்லாமல், கையினாற் பிடித்தால் அகப்படுவது அன்று. இவ்வாறு, சூக்கும உடம்புக்கும் அதன் மேற் போர்க்கப்பட்ட ஆடைக்கும் வெண்ணிறம் வருவது அவ்வுடம்பினுள் வசிக்கும் உயிரின் பரிசுத்தத்தைப் பொறுத்ததாக இருக்கின்றது. ஓர் ஆன்மா பரிசுத்தமான சிந்தனையுடையதாக இருக்குமாயின், அப் பரிசுத்தத்திற்குப் பொருந்த அதன் சூக்கும உடம்பும் ஆடையும் தும்பை மலர்போன்ற வெண்ணிற முடையதாகின்றன. அங்ஙனமின்றி அவ்வான்மா தீயசிந்தனையும் தீயசெய்கையும் உடையதாயின் அவற்றிற்கு இசையவே அதன் சூக்கும உடம்பும் ஆடையும் கரியநிறம் உடையவாகின்றன. தீயோர் இறந்த பிறகு அவர் ஆவேச உருவத்தைக் கண்டவர்கள் அது கன்னங்கறே லென்றிருந்ததைக் கண்டு அச்சமடைந்தார்கள்; இன்னும் பலர் அக்கரிய வடிவின் றோற்றத்தினால் தாங்குதற்கு அரிய அச்சமுற்று உயிரிறந்தும் போனார்கள். இவ்வுண்மையை உள்ளபடி

உணர்ந்தால், இந்நில உலகத்தில் தாம் உயிரோடு இருக்கும் நாட்களில் தீயசெய்கைகளைச் செய்பவர்கள் அவற்றை விடுத்து நல்வழிப்படுவார்கள். இரண்டு கையும் விரித்தாற் பாவம் என்று அலட்சியமாய்ச் சொல்லித் தீய செயலே செய்பவர்கள், தாம் இறந்த பிறகு இருள் உலகத்தில் இருள் வடிவு தாங்கி அலைவதைச் சிறிதேனும் அறிவார்களானால் அத் தீய செயல்களைச் செய்ய முந்துவார்களா? முந்தவே மாட்டார்கள். தீய செயலைச் செய்தோன் ஆன்மாவானது மரணத்திற்குப்பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/59&oldid=1623647" இலிருந்து மீள்விக்கப்பட்டது