பக்கம்:மறைமலையம் 3.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
36

❖ மறைமலையம் - 3 ❖



6. ஆவிவடிவில் நின்ற ஒரு மாதின் கடிதம்

“என் அன்பே, யான் உன்னை விட்டு வந்தபோது முழுதும் யான் உன்னைப் பிரிந்துபோனேன் என்றோ அல்லது நீயும் இங்கே வரும்வரையில் யான் உன்னைப் பிரிந்தேனென்றோ நினைத்தாய். நீ மரணம் என்று சொல்லும் அதற்குப் பிறகு யான் உன் பக்கத்திலேயிருப்பதுபோல, அதற்குமுன் உன்னுடன் நான் ஒருபோதும் இருந்ததில்லை.

என் உடம்பாகிய கட்டினின்றும் யான் விடுதலை பெறக் கண்டேன். அஃது யான் முன்னறியாத ஒரு புதுமையை எனக்கு விளைவித்தது. என் உடம்பு கிடந்த படுக்கையின் பக்கத்திலே யான் நெருங்கி நின்று கொண்டிருந்தேன்: என் கண்களை மூடுதற்குமுன் என் அறையிலிருந்த பொருள்களை எந்த நிலைமையிற் கண்டேனோ அதே நிலைமையில் அவற்றை யெல்லாம் பார்த்தேன். இறந்து போவதில் ஏதொரு துன்பமும் யான் உணர்ந்திலேன்; மிக்கதோர் அமைதியும் சாந்தமும் மாத்திரம் உணர்ந்தேன். அதன் பிறகு யான் மறுபடியும் விழித்துப் பார்க்கையில் என் அறையிலே எனது பழைய உடம்பிற்கு வெளியிலேயே யான் நின்று கொண்டிருக்கக் கண்டேன். முதலில் யான் இவ்வளவு சுகமாயிருப்பதைப் பற்றி வியப்படைந்தேன். அதன் என்னுடம்பைக் கடந்துயான்

.

பின்றான்

வந்துவிட்டேனென்று கண்டேன்.

பின்னுஞ் சிலநேரம் காத்திருந்தேன்; அதன்பின் கதவு திறந்தது. அன்புள்ள அ-என்பவள் உள்ளே வந்தாள். அவள் மிகவும் விசனமுடையவளாயிருந்தாள்; அவள் என் ஏழை உடம்பை பார்த்து அதுவே நான் ஆனதுபோல் ஏதோ சில சொன்னாள். அவளை நான் பார்த்தவண்ணமாகவே நின்றேன்; ஆனால் அவள் நினைவெல்லாம் யான் விட்டுவந்த என் பழைய உடம்பின் வசப்பட்டு நின்றன. அதனைப் பார்த்தவுடன் என்னால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/69&oldid=1623658" இலிருந்து மீள்விக்கப்பட்டது