பக்கம்:மறைமலையம் 3.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
44

❖ மறைமலையம் - 3 ❖



7. ஆவியான கிளாட்ஸ்டன்

துரையுடன் உரையாடல்

இதன்பிற் சிறிது நேரம் எல்லாரும் வாய்பேசாதிருந் தார்கள்; கடைசியாக மறுபடியும் உரையாடல் தொடங்கியது. அங்கே நடந்த உரையாடலைச் சுருக்க மெழுதுவோர் ஒருவர் குறித்துக் கொண்டே வந்தார்; கூட விருந்தவர்களும் குறிப்புகள் எழுதி வந்தார்கள். ஆவேசங் கொள்ளப்பட்டவன், சூக்கும தேகவாசிகள் பேசுகின்ற சொற்கள் நெடுந்தூரத்திலிருந்து வருவதுபோற் றோன்றுதலால் அச் சொற்கள் எல்லாவற்றையுந் தான் கேட்பது மிகவுங் கடினமாயிருக்கிறதென்றும், யூலியா, கார்டினல் மான்னிங் முதலான சில ஆவேச உருக்களை அன்றி மற்றவற்றைத் தான் காணக்கூடவில்லை யென்றுங் கூறினான். கிளாட்ஸ்டன் துரையவர்களின் சொற்களை மிகவும் உறுத்துக் கேட்கவேண்டி யிருந்தமையால், இந்த உரையாடல் முடிந்ததும் ஆவேசங் கொள்வோனுக்குக் களைப்பும் தலைவலியும் உண்டாயின. அவர்கட்குள் நடந்த அவ் உரையாடலை இங்கே மொழி பெயர்த்து எழுதுகின்றோம்.

66

"இப்போது பலர் பேசுங்குரல் எனக்குக் கேட்கின்றது. முதலிற் பேசுகிறவர் கார்டினல் மான்னிங். அவர், 'உங்களுக்குச் சாந்தம் உண்டாக்கக்கடவது என்கிறார். என் அன்புள்ள சினேகிதியோடு உன்னிடம் வந்து நிற்பது எனக்குப் பிரியமாகவே யிருக்கின்றது. இப்போது கிளாட்ஸ்டன் துரையவர்கள் உன்னிடம் வரப்போகின்றார்' என்கிறார்,” என்று ஆவேசக் காரன் கூறினான். மற்றொரு குரல் : “இன்று காலைநேரத்தில் இங்கே கூடியிருப்பவர்கள் பக்கமாக எனது கவனம் திருப்பப்பட்டது. என்னிடமிருந்து உங்கட்கு ஆக வேண்டுவது யாது?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/77&oldid=1623667" இலிருந்து மீள்விக்கப்பட்டது