பக்கம்:மறைமலையம் 3.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
52

❖ மறைமலையம் - 3 ❖

சேர்ந்து நிற்பதில், இம்மண்ணுலகச் சேர்க்கையைத் தெளிவாக உறுதிப்படுத்திக்கொள்வது முடியவில்லை”

ஸ்டெட் : “உங்கள் பழைய நண்பரான மார்லி பிரபு அவர்களின் சேர்க்கை நல்லதாயிராதா?”

கிளாட்ஸ்டன் : “இச் சமயத்திற்கு அவசியம் வேண்டற் பாலனவான சுறுசுறுப்பும் மனவெழுச்சியும் அவரிடம் ல்லாமையால் அவர் இக் காரியத்திற்குப் பயன்படமாட்டார்."

ஸ்டெட்: “லாயட் ஜார்ஜ் அவர்களைப் பற்றி எப்படி?”

கிளாட்ஸ்டன் : இதற்கு வேண்டும் சுறுசுறுப்பும் மன எழுச்சியும் அவரிடம் இருக்கின்றன; ஆனால், இவற்றைப் போலவே அவசியமான கவனமான சொல்லும், மனநிறைவும் மனநிலையும் அவரிடம் இல்லை. அதுவும் துன்பம். துன்பம்.”

ஸ்டெட் : “தங்கள் பழைய நேசரான பால்வர் துரையவர்களைப் பற்றி எப்படி? அவர் மற்றக் கட்சியிலிருக்கிறார்; ஆனாலும், தெளிந்த, நிலையான அவர் சிந்தையின் வழியாகத் தாங்கள்’

கிளாட்ஸ்டன் : “ஆம், கனந்தங்கிய அந்நண்பரினது உருவத்தின் வாயிலாகக் கீழான இவ்வுலகங்களில் தொடர்புபட்டு நிற்றல் எனக்கு உண்மையிற்கூடிய தொன்றேயாகும்; என்றாலும் இப்போர் எழுச்சியினால் உண்டாகற்பாலதான உக்கிர குணத்தை அவரிடத்தில் விளைவித்தல் கூடாதகாரியம்; அதுவேயுமன்றி, நீர் முன்னமே சொல்லியபடி, அவர் நமது கட்சியிலிருந்து வேலை செய்யவுமில்லையே”

ஸ்டெட் : “உவெஸ்ட்மின்ஸ்டர் என்னுமிடத்தில் இவர் களோடு தாங்கள் ஏதேனும் தொடர்பு வைத்திருக்கின்றீர்களா?”

கிளாட்ஸ்டன் : “ஏதோ ஓரானொரு காலத்தில் அவர்களுடன் யான் தொடர்புகொள்வதுண்டு. இங்கே கூடியிருக்கும் இந்த மந்திரச் சபையார் ஏவிவிட்ட மந்திர சக்தியானது என்னைக் கொண்டுவந்து இச்சமயத்தில் இவ்வரசாங்க காரியத்தில் பிணைத்துவிட்டது. இந்தச் சச்சரவில் யான் எவ்வளவுதூரம் தலையிட்டுக்கொள்ள அனுமதியுண்டோ, அவ்வளவுக்கு இதிற் தொடர்பு கொண்டவர்களை ஊக்க முறுத்திச், சுதந்தர உரிமையாகிய பெருமை மிக்க பழங்கொடியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/85&oldid=1628600" இலிருந்து மீள்விக்கப்பட்டது