பக்கம்:மறைமலையம் 3.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
53

அவர்கள் கையிற் பிடித்துக்கொண்டு முன் நடக்க முயல்கிற்பேன். நான் முற்கூறியபடி வேறு விஷயங்களில் எனக்குக் கருத்தூன்றி நின்றாலும், இதனை யான் செய்து முடிப்பேன்.”

ஸ்டெட்: “ஐயா கிளாட்ஸ்டன் துரையவர்களே! தங்கட்கு வந்தனம். இனி இம் மற்றக் கேள்விகளைப் பற்றி யாது சொல்லுகிறீர்கள்?”

கிளாட்ஸ்டன் : "இக் கேள்விகளுக்கு விடை சொல்ல விரும்புகிறேன்; ஆனால், இப் பெண்மணியாரின் கையைப் பற்றி அவற்றை எழுதிக் காட்டுகிறேன்.

ஸ்டெட் : "அதற்காகத் தங்கட்கு மிக்க வந்தனம். இக் கேள்விகளைப் பற்றி எனக்கே அபிப்ராயங்கள் இருத்தலால்,யான் தங்கள் விடைகளை எழுதிக் கொள்வதைக் காட்டிலும், இவ் விஷயங்களைப் பற்றி ஒன்றுமேயறியாத இப் பெண்மணியார் அவற்றை எழுதிக் கொள்வது மிக நல்லதாகும்."

கிளாட்ஸ்டன் : “இப் பெண்மணியின் கையை யான் முற்றும் உபயோகப்படுத்தக் கூடுமென்று காண்கின்றேன்; நாளையாவது, அல்லது அதற்கும் முன்னேயாவது இவர் எனக்குச் சமயந் தருவாரானால், இவர் வாயிலாக அவற்றை எழுதிவைப்பேன்”

ஸ்டெட் : ஐயா கிளாட்ஸ்டன் துரையவர்களே! இக் கேள்விகளை யான் சிறிது மாற்றிக் கூறுவதைப் பற்றித் தங்கட்குச் சிந்தையில்லை?”

கிளாட்ஸ்டன் : “அதனை உமது விருப்பப்படி செய்யலாம். நாம் வெற்றியடையப் போகின்றோம். தன்னலமும், தற்சுதந்தரமும், தடுத்துக் கேட்கப் பொறாமையும் என்னும் இவற்றின் வலிமை மிக்கிருந்தாலும், நாம் வெற்றி அடைவோம். நுட்ப அறிவுள்ளவர்களும், வெளிப்படையாய் நிற்பவர்களும் பகைவராயிருத்தலின் இவர்களை வெல்லும்பொருட்டு நாம் இடுஞ்சண்டை மிகவுங் கொடுமையாகத்தானிருக்கும். ஆங்கி லேய சாதியாரைப்பற்றிய சரித்திரத்தில் இது மிகவும் ஆபத்தான காலம். குடிமக்களால் நிர்ணயிக்கப்படுகின்ற செய்கைக்குத் தக்கபடி அவர்கள் பெருக்கமடைவதும் அல்லது சுருக்கமடைவதும் காணப்படும். அவர்கள் திருத்தமான வழியிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/86&oldid=1628603" இலிருந்து மீள்விக்கப்பட்டது