பக்கம்:மறைமலையம் 3.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
65



9. பணப்பற்றுள்ள ஓர் ஆவியின்

வரலாறு

மாதம்

1877 ஆம் வருடம் ஆகஸ்டு கஸ்டு மாதம் 18ஆந் தேதி ஸ்டெயிண்டன்மோஸஸ் என்பவருக்கு எதிரிலே வயது முதிர்ந்த ஒரு கிழவியின் வடிவந் தோன்றியது. தோன்றிய அவ் வடிவம் பின்வருமாறு அவருடன் பேசத் தொடங்கி, “நான் நிலவுலகத்தில் இருந்த போது நல்லெண்ணமுந் தூயசிந்தையும் நல்லொழுக்கமும் இரக்கமும் அன்பும் உடையவளாயிருந்தேன். எனக்குமுன் இறந்துபோன என் கணவனோ பணத்தை மிகுதியாகத் தேடிக் குவிப்பதில் மிக்க ஆசையுடையவரா யிருந்தமையால், இறந்த பிறகும் இவ்வுலகத்திலேயே பற்றுள்ளவரா யிங்குவந்தே அலைந்து கொண்டிருந்தார்; இறைவனுடைய திருவருளை நாடி மேலுள்ள இன்ப உலகங்களிற் செல்ல அறிவில்லாதவராய் இங்கேயே சிறைப் பட்டுக் கிடந்தார். நானோ, இவர் இவ்வுலகப் பற்றைவிட்டு எல்லாம் வல்ல பெருமான் திருவடிக்கு எப்போது ஆளாகுவார் என்று இடைவிடாது இறைவனை வேண்டிவழுத்தி வந்தேன். எனக்குங் காலம்வர யானும் நிலவுலகத்தை விட்டு நீங்கி என் கணவனுடன் வந்து சேர்ந்து என் வற்புறுத்துதலாலும் வேண்டுகோளாலும் அவர் இவ்வுலகப் பற்றையும் பொரு ளாசையையும் அகற்றும் படி செய்து அவருடன் இறைவன் திருவருளை நாடி மேல் உலகங்களிற் செல்கின்றேன்,” என்று கூறியது.

இந்தக் கிழவியின் கணவனுடைய ஆவேச உருவானது மேற்சொல்லப்பட்ட ஸ்டெயின்டன் மோஸஸ் என்பவருக்கு எதிரிற் பதினோருநாள் தோன்றியது. அவ் வுருவம் வரும்போது சிலசமயம் மனஎரிவோடு சத்தமிட்டுக் கொண்டும், வேறு சிலசமயம் உஸ் என்று ஆவி போக்கிக் கொண்டும், மற்றுஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/98&oldid=1623691" இலிருந்து மீள்விக்கப்பட்டது