பக்கம்:மறைமலையம் 30.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

மறைமலையம் - 30

என்றும் அவர் இல்லறத்தைத் தமிழ்ச் சான்றோர் வழக்குப் பற்றித் துறவறத்தினும் மிக்கெடுத்துக் கூறியதூஉம் மென்க.

னி, இன்பத்தின் வழித்தாகிய இல்லத்தைத் தெய்வத் திருவள்ளுவனார் முன்வைத்து நூல்யாத்தமையின், அவர் இன்பத்துக்கே முதன்மை கொடுத்தார் என்று எமது தலைமைப் பேருரையிற் கூறினாமன்றி, இல்லாளொடு கூடிநுகரும் இன்பமும் அவர் இல்லற இயலிற் கூறினாரென மொழிந்திலேம். இவ்வாறாகவும், இன்ப நுகர்ச்சிக்கு அவர் முதன்மை தந்தார் என யாம் மொழிந்தேம் எனப்பிழைபடக்கொண்டு, அம்மறுப் புரைகாரர் தமக்குத் தோன்றியவாறெல்லா மெழுதினார். இன்பமும் இன்பநுகர்ச்சியும் வேறாதலை உணர்ந்திருந்தன ராயின் அங்ஙனம் பிழைபடஉரையார். மனையாளைப் புணர்ந்து நுகரும் இன்பங் காமத்தின்பாற்படும். அவளைப் புணராத காலங்களில் அவடன் அருங்குணங்களொடு பழகுதலானும், அவடன் அறிவுச் செயல்களைக் காண்டலானும், அவடன் அறிவுமொழிகளைக் மாழிகளைக் கேட்டலானும், வகையினும் அவன் தன்னோடு ஒத்து

நினையுந்தொறும்

எல்லா

ஒழுகுதலை வியத்தலானும், அவடன் எல்லா நலங்களை நோக்குதலானுங் கணவற்கு ஓவாது விளையு மின்பங்ககாதலின்பத்தின்பாற் படும். இங்ஙனம் தன்கொழுநன்றன் அருமைப்பாடுகளை உணருந் தாறும் மனைவிக்குங் கழிபெருங் காதலின்பம் ஓவாது விளையாநிற்கும். இவ்வாறு காதலின்ப நிகழ்ச்சி அவர் தமக்குள் உண்டாயினலன்றி அவர் தமக்குள் அன்புடையராய் ஒழுகுதல் இயலாது; அன்புடையராய் ஒழுகினாலன்றி அவர் ஒருமித்துநின்று,

66

“அறவோர்க் களித்தலும் அந்தணர் ஓம்பலும்

துறவோர்க் கெதிர்தலுந் தொல்லோர் சிறப்பின் விருந்துஎதிர் கோடலும்"

(சிலப்பதிகாரம்)

ஆகிய இல்லறத்தை இனிது நடாத்துதலும் ஒரு சிறிதும் இயலாது. ஆகவே, இன்பத்தின் வழித்தாகவே அல்லது ன்பத்தை நுதலியே இல்லறம் நடைபெறுதல் ஐயுறவின்றித் தளியப்படும். இவ்வியல்பினை, ஆசிரியர் திருவள்ளுவ நாயனாரே காதலின்பத்தின் விளைவான அன்பை முன்வைத்து அறத்தைப் பின்வைத்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/129&oldid=1592324" இலிருந்து மீள்விக்கப்பட்டது