பக்கம்:மறைமலையம் 30.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

101

காதலின்ப முண்டென்பது யாங்ஙனம் பெறப்படுமெனிற் கூறுதும்; எமது சைவசித்தாந்த நூலாகிய சிவஞான சிந்தியார் உலகத்து மக்கள் மாட்டு நிகழும் அன்பின் சேர்க்கைகளை யெல்லாம் நால்வகைப்படுத்துச்,

66

"சன்மார்க்கம் சகமார்க்கம்

சற்புத்திரமார்க்கம் தாசமார்க்கம்

وو

என்று கூறி, இந்நால்வேறு வகையில் நிகழும் அன்பும் இறைவன் பால் அடியார்க்கு அவரவர் தரத்திற் கேற்ப நிகழுமென வலியுறுத்திற்று. இது கொண்டு அன்பின் தொடர்பும் அதற்குக் காரணமாவதும் ஆராயற்பாலன. கீழ்ப்படியின் முதலில் தாசமார்க்கம் நிற்பது; அஃது ஒருதலைவனுக்கும் அவனுக்கு ஏவல் செய்யும் அடியானுக்கும் இடைநிகழும் அன்பின் தொடர்பைக் காட்டும். ஏவலாளில்லையேல் தானே செய்து முடிக்கவேண்டுந் தொழில்களை ஒருதலைவன் மேற்கொள் வனாயின் அவன் எவ்வளவு துண்புற்று வருந்துவன்! அவ்வாறின்றித், தன் சொல்லுங்குறிப்புங் கடவாத நல்ல ஓர் ஏவலன் தன் தலைவன் இடர்ப்படுதற்குரிய தொழில்களைத் தான் நன்கு செய்து முடிப்பனாயின், அதனால் அத்தலைவன் இன்புற்றுத் தன் ஏவலனும் இன்புற்றிருக்குமாறு அவற்கு ஊண்உடை உறையுள் முதலிய நலங்களெல்லாம் நல்கக் காண்டுமல்லமோ? இவ்வாற்றால் ஒரு தலைவனாவான் தனக்கோர் இன்பத்தை நாடியும், ஏவலனாவான் அவற்குப் பணிபுரியமாற்றால் தனக்கு வரும் இன்பத்தை நாடியும் ஒருவரோடொருவர் தொடர் புடையராய் வாழ்கின்றனரே யல்லால், அவ்விருவரும் இன்பத்தை நாடாது தொடர்புறக் காண்கிலேம். ஆகவே, அவர் தமக்குள் நிகழும் அன்பின் தொடர்புக்கும் இன்பமே காரணமென்பது பெற்றாம். த்தொடர்பின்கண் தலைவன் உயர்ந்தோனும் ஏவலன் தாழ்ந்தோனுமாய் இருத்தலின் ஏவலன் தலைவனை அணுகாது அகன்றொழுகும் நிலையினானாவன். இவ்வாற்றால் இவர்தஞ் சேர்க்கை கீழ்ப்படிக்கண் நிறுத்தப்பட்டது.

D

இனித் தாசமார்க்கத்திற்கு மேலான இரண்டாம்டடியில் நிற்பது சற்புத்திரமார்க்கம் ஆகும். இஃது ஒருதலைவற்கும் அவன்றன் புதல்வற்கும் இடைநிகழும் அன்பினை உணர்த்து வது. தன் தலைவன்பால் அடியவனுக்கில்லாத உரிமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/134&oldid=1592344" இலிருந்து மீள்விக்கப்பட்டது