பக்கம்:மறைமலையம் 30.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

மறைமலையம் - 30 : -30

கணவன்,

இனிக், காரைக்காலம்மையார்க்கு அவர்தஞ் சுற்றத்தாரால் மணம் பொருத்தப்பட்ட அவர்தந் தகுதிக் கு ஒத்தவனல்லன் என்ற எமதுரையை மறுப்பான் புகுந்த அம்மறுப்புரைகாரர், கல்வியிலுஞ் சிவநேயத்திலும் அடியார் வழிபாட்டிலும் அவன் அம்மையார்க்கு முழுதும் ஒத்தவன் என்பதனையன்றோ நாட்டல்வேண்டும்? அவர் அவ்வாறு செய்தலை விடுத்துத் தமது கூற்றின் முரணை அறுக்குஞ் சேக்கிழார் செய்யுட்களையே எடுத்துக்காட்டி நெகிழ்ந்து போதலுடன் அவன் அம்மையார்க்குத் தக்கான் அல்லனெனச் சேக்கிார் கூறினரா? என்று வினாவுதலுஞ் செய்கின்றார். அம்மையார்க்கும் அவர்தங் கணவற்கும் உள்ள தொடர்பினை ஆசிரியர் சேக்கிழார் கூறிச்செல்லும் முறையின்படி அதனையுணருஞ் சிறுமகாரும், அவன் அவர்க்குத் தக்க கணவனல்ல னென்பதை நன்கறிவர். அச்சிறுமகார்க் குள்ள உணர்ச்சி தானும் இன்றி, அம் மறுப்புரைகாரர் வினாவுவராயின் அவர்க்கு அறிவுகொளுத்துதற்குரியார் அச்சிறுமகாரே யாவர். ஆசிரியர் சேக்கிழாரோ தாம் கூறிச் செல்லும் முறையில் அவர் அவர்க்குத் தக்க கணவனல்லன் என்னு முண்மையினை இனிது விளங்க வைத்தாற்போல், அவன் அவர்க்குத் தக்கானென்பதனை யாண்டேனுங் கூறியிருக் கின்றனரா? அல்லது அம்மை யாராவது அக்கணவன்பாற் காதலன்பு பூண்ட ஒழுகினாரென விளம்பினரா? சிறிது மில்லையே. அவன் அம்மையாரொடு தனி மனைக்கண் வைகியவழிச் செல்வத்தைப் பெருக்கினா னென்றன்றோ மொழிந்தனர். அவன் அம்மையார் மேற்காதல் கொண்டு ழுகினான் என்றுரையாமல்,

என

“தகைப்பில் பெருங் காதலினால் தங்குமனை வளம்பெருக்கி, மிகப்புரியுங் கொள்கையினில் மேம்படுதல் மேவினாள்

وو

அவன் பொருள்மேற் காதல் வைத்து அதனைப் பருக்குதலிற் கருத்தூன்றினான் எனக் கூறுதலை உற்று நோக்குங்கால், அவன் பொருண்மேற் காதல்கொண்டாற் போல் அம்மையார் மேற் காதல்கொண்டிலன் என்பது சிறிது அறிவுடையார்க்கும் விளங்கற்பாற்றாம். அவன் பொருள்மேற் காதல்கொண்டு முனைந்து நிற்க, அம்மை யாரோ சிவபிரான் திருவடிக்கட் காதல் பெருக வைகினார் என்பது போதரப்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/147&oldid=1592396" இலிருந்து மீள்விக்கப்பட்டது