பக்கம்:மறைமலையம் 30.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் “பூங்குழலார் அவர்தாமும் பொருவிடையார் திருவடிக்கீழ் ஓங்கியஅன் புறுகாதல் ஒழிவின்றி மிகப்பெருகப்

பாங்கில்வரும் மனையறத்தின் பண்புவழா மையிற்பயில்வார்"

ஆசிரியர்

115

என்று கூறுதலை ஆழ்ந்து ஆராய்வார்க்கு அம்மையார் தமக்குத் தக்கவ னல்லாத அக்கணவனொடு காதலால் வைகாது கடமைக்காகவே வைகி மனையறத்தைச் செவ்விதின் நடாத்திக் கொண்டு சிவபிரான் திருவடிக்கண் மட்டுமே காதலிற் பெருகினார் என்பது உணரக்கிடக்கு மன்றோ?

இன்னும், அம்மையார் சிவனடியார்க்குத் தொண்டு செய்வதில் உறைத்து நின்றமை புலனாக,

“நம்பரடி யார்அணைந்தால் நல்லதிரு வழுதுஅளித்தும் செம்பொன்னும் நவமணியும் செழுந்துகிலு முதலான

தம்பரிவி னாலவார்க்குத் தகுதியின்வேண் டுவனகொடுத்தும் உம்பர்பிரான் திருவடிக்கீழ் உணர்வுமிக்க ஒழுகுநாள்”

என்று ஆசிரியர் சேக்கிழார் அம்மையார் திருத்தொண்டினை நன்கெடுத்து விளம்பினாற் போல, அவர்தம் கணவனும் அவரோ டொத்து நின்று அடியார்க்குத் திருத்தொண்டு செய்தனனென யாண்டேனுங் கூறியுள்ளரோ! எட்டுணையுமில்லையே.

அதுவேயுமன்றித், தான் விடுத்த மாங்கனிகள் இரண்டுள் ஒன்றை அம்மையார் அடியார்க்கு இட்டனராக, அதனை அறியாதே முன் ஒன்றனை அயின்று, பின்னுமொன்று வேண்டியபோது அம்மையார் தாமதனை அடியார்க்கிட்ட வரலாற்றை அவன்பால் உரையாமல் அஞ்சினார் என்பதனை ஆராய்ந்து பார்க்குங்கால், அவன் அடியார்க்கு வேண்டுவ காடுத்தலிற் சிறிதும் விருப்பிலான் என்பது துணியப்படுகின்ற தன்றோ? அதன்பின்னர்; அவர் இறைவனருளாற் பெற்ற மாங்கனியை அவனுக்கு இட அதன் அமுதினுமிக்க சுவையை வியந்து அது வந்த வரலாற்றை அவன் வினாவியபோதும், அம்மையார் நடுக்கமுற்று அஃது இறைவனருளாற் கிடைத்த உண்மையினைத் தெரிவித்தபோதும் அவன் அம்மையாரின் சிவநேயப் பேரருள் நிலையினை அறிந்திலன் என்று ஆசிரியர் சேக்கிழாரே “ஈசனருள் எனக்கேட்ட இல் இறைவன் அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/148&oldid=1592400" இலிருந்து மீள்விக்கப்பட்டது