பக்கம்:மறைமலையம் 30.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

181

16-4-1898 திரு. சூரியநாராய சாஸ்திரியைக் கண்டேன். நெடுநேரம் உரையாடினோம். எனது ‘முதற் குறள்வாத நிராகரணம்’ படித்து மிக மகிழ்ந்தார்.

.

24-4-1898 இன்று விடியற்காலை திரு. சூரியநாராயண சாஸ்திரியவர்களைக் கண்டு, அவரையும் திரு. அனவரத விநாயகம் பிள்ளையவர்களையும் திரு. பாலசுந்தர முதலியாரின் இல்லத்துக்கு அழைத்துச் சென்றேன். தமிழ்ச் சைவ சித்தாந்த சபை ஒன்றைத் தொடங்குவது குறித்து நெடுநேரம் கலந்து பேசினோம். மாலையில் ஸ்ரீலஸ்ரீ சோம சுந்தர நாயகரவர்கள் இல்லத்தில் கோழிக்கோடு ‘தினகரன்’ திரு. அரங்கசாமி நாயரைக் கண்டேன்.

2-5-1898 சம்பளம் ரூ. 25 பெற்றுக் கொண்டேன்.

15-5-1898 ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்களைக் காணச் சென்றேன். தமக்குப் பதிலாக என்னைச் சொற்பொழிவாற்று மாறு அவர் கூறினார்.

10-6-1898 வீட்டுப் பொருளனைத்தையும் 11, சீனு முதலித்தெரு இல்லத்துக்கு மாற்றினேன்.

2-7-1898 (எனக்கு உடல்நிலை சரியில்லாமையால்) திரு. சூரிய நாராயண சாஸ்திரியவர்கள் என்னைக் காண வந்தார். தம் தமிழ் ஆசிரியர் திரு. சபாபதி முதலியார் இறந்துவிட்ட துயரச் செய்தியை அறிவித்தார்.

19-7-1898 ‘ஞானபோதினி'க்குக் கட்டுரை தருமாறு சூரியநாராயண சாஸ்திரியவர்கள் என்னைக் கேட்டார். தாண்ணூறு தொள்ளாயிரம்' குறித்து எழுதுவதாக ஒப்புக் கொண்டேன்.

27-7-1898 ஆகுபெயரும் அன்மொழித் தொகையும் ஒன்றே என வலியுறுத்திக் கட்டுரை வரைந்தேன். சூரிய நாராயண சாஸ்திரியவர்களால் இதனை மறுக்க இயலவில்லை.

4-8-1898 பண்டிதர் உ. வே. சாமிநாத ஐயர் பதிப்பித்த 'மணிமேகலை ன்று வெளிவந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/214&oldid=1592556" இலிருந்து மீள்விக்கப்பட்டது