பக்கம்:மறைமலையம் 30.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

மறைமலையம் - 30 -

8-4-1920 மதுரைநாயகம் பிள்ளை மறைந்தார் எனும் செய்தியை அவர்தம் மைந்தரின் மடல் வாயிலாக அறிந்தேன். அவர் என் இளமைக் கால நண்பர்; என் சிந்தனையை உருவாக் கியதோடு ஒழுக்க நெறியிலும் சைவ சித்தாந்த வழியிலும் என்னை ஆற்றுப்படுத்தினார்.

7-6-1920 என் கடைசி மகளை அவர்தம் பள்ளியில் சேர்த்துக் கொள்ள இயலுமா என வினவி சுப்புலட்சுமி அவர் கட்கு மடல் விடுத்தேன்.

11-7-1920 தம் இந்து விடுதியில் என் மகளைச் சேர்த்துக் கொள்ள இணங்கி சுப்புலட்சுமி அம்மாள் எழுதிய கடிதம் வரப் பெற்றேன்.

12-7-1920 திருவல்லிக்கேணி கடற்கரைக்கு அருகே இருக்கும் 'ஐசுஅவுசு' சென்று சுப்புலட்சுமி அம்மாளைக் கண்டேன். என் மகளைச் சேர்த்துக் கொள்வது பற்றி இந்துப் பெண்கள் பள்ளிக் கண்காணிப்பாளரிடம் பேசுவதாகக் கூறினார்.

23-8-1920 தம் தந்தையார் ஜே.எம். நல்லசாமிப் பிள்ளை மறைந்த செய்தியை அறிவித்த அவர்தம் மைந்தர் ஜே.என். இராமநாதனுக்கு இரங்கற் கடிதம் விடுத்தேன்.

1-9-1920 திருவல்லிக்கேணி அரசாங்கப் பெண்கள் பள்ளியில் நீலாவைச் சேர்த்தேன். நீலா தங்கியிருக்கும் இந்து விடுதிக்குக் கிட்டிணவேணி அம்மாள் கண்காணிப்பாளராக அமர்த்தப்பட்டமை எங்கள் நல்லூழ் என்றே சொல்ல வேண்டும். நீலாவின் நலத்தில் சுப்புலட்சுமி அம்மாள் சிறப்பு அக்கறை காட்டினார். திரு.வி. கலியாணசுந்தர முதலியார் அவர்களுடன் நெடுநேரம் உரையாடினேன்.

5-12-1920

.

ஆனந்த

போதினி’ உரிமையாளர் திரு. முனுசாமி முதலியார் முற்பகலில் என்னைக் காண வந்தார்.

8-12-1920 தம் மாகாணத்தில் மகாத்மா காந்தி அவர்கள் ஒரு இந்துப் பல்கலைக்கழகம் அமைத்திருக்கிறார். அவர் தம் பெரு முயற்சி வெற்றி பெறுவதாக!

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/255&oldid=1592612" இலிருந்து மீள்விக்கப்பட்டது