பக்கம்:மறைமலையம் 30.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

1921

223

8-1-1921 சென்ற நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டில் திரு. விசயராகவாச்சாரியார் ஆற்றிய தலைமையுரையைப் படித்தேன். அருமையான அவ்வுரை, ஒத்துழையாமை பற்றி நான் கொண்டுள்ள கருத்துகளை எதிரொலிக்கிறது. திரு. காந்தியின் பல கருத்துகள் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதவை.

10-1-1921 டர்பன் திரு. சி. விருத்தாசலம் பிள்ளைக்கு என் நூல்களை அனுப்பி வைத்தேன்.

·

11-1-1921 காங்கிரஸ் மாநாட்டு உரைகளைப் படித்தேன். 26-1-1921 ‘அகலிகை வெண்பா' வரப்பெற்றமை குறித்துத் திரு.வெ.ப.சுப்பிரமணிய முதலியார்க்கு மடல் விடுத்தேன்.

11-2-1921 வட இந்தியாவில் ஒத்துழையாமை இயக்கம் வலுவாக உள்ளது. கல்கத்தா மாணவர் பெரும்பாலானோர் கல்லூரிகளை விட்டு வெளியேறி விட்டனர். மகாத்மா காந்தியும், திரு. சி.ஆர் தாசும் அருமையான வேலை செய்து வருகின்றனர். திரு. சி.ஆர். தாசு பெருந் தியாகம் செய்துள்ளார். ஈசன் இருவர்க்கும் அருளட்டும்! தென்னாடு செயலற்று உள்ளது.

12-4-1921 'திராவிட'னுக்கு மீண்டும் ஆசிரியராக அமர்த்தப் பட்டதை வாழ்த்தி திரு. பக்தவத்சலம் அவர்கட்கு மடல் விடுத்தேன்.

22-5-1921 ஞானசாகரம் 9ஆம் தொகுதியின் கடைசி மூன்று இதழுக்குள் முடித்துவிட வேண்டுமென்று 'கோகிலாம்பாள் கடிதங்க’ளை நாளும் எழுதி வருகிறேன்.

22-6-1921 அரசாங்கம் தானாக முன்வந்து அழைத்தால் இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளர் பாறுப்பை ஏற்றுக் கொள்வேன் என்று கொழும்பு வேலுப் பிள்ளையவர் கட்கு மடல் விடுத்தேன்.

28-6-1921 திருக்கழுக்குன்றம் ... வழக்கம் போல் இரண்டு கழுகுகள் வந்தன. பண்டாரம் அவற்றுக்கு உணவளித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/256&oldid=1592613" இலிருந்து மீள்விக்கப்பட்டது