பக்கம்:மறைமலையம் 30.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

  • மறைமலையம் - 30

நடந்தது. தலைமையேற்க நான் அழைக்கப்பட்டேன். அப்பெரு மகனைப் பற்றி 15 மணித்துளி உரையாற்றினேன்.

17-6-1925 எங்கள் கட்டுரைகட்கு ரூ.5/- வழங்கப்படு மென்றும் பதிப்புரிமை எங்களிடமே இருக்கும் என்றும் அறிவித்துத் 'தமிழ்நாடு' துணையாசிரியர் சொக்க லிங்கம் கடிதம் எழுதியிருந்தார்.

7-9-1925 ‘தமிழ்நாடு' அலுவலகத்திலிருந்து திரு. சொக்க லிங்கம் பிள்ளையும், திரு. தண்ட பாணி பிள்ளையும் என்னைக் காண வந்தனர்.

1926

3-1-1926 திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் நிகழ்ந்த உலகச் சமய மாநாட்டில் கலந்து கொண்டு 'The Soul's Emancipation' எனும் கட்டுரை படித்தேன்.

5-1-1926 ‘திராவிட'னில் மெய்ப்புத் திருத்துநராக என் மகன் திருநாவுக்கரசு சேர்த்துக் கொள்ளப்பட்டான்.

20-1-1926 தமிழ் இலக்கியத்தைப் பற்றியும், அதனைப் பயில வேண்டியதன் முதன்மையையும் வலியுறுத்தி என் கருத்தைத் தமிழ்ப் பல்கலைக் கழகக் குழுவின் துணைச் செயலாளர்க்கு மடல் விடுத்தேன்.

10-2-1926 மேதகு அரசரின் அரசாங்கத்திடமிருந்து ‘தமிழ்ப் பேரகராதி'யின் முதலிரு தொகுதி அன்பளிப்பாக வரப் பெற்றேன். எங்கள் சிற்றூரின் மேல் வானூர்தி ஒன்று பறந்து சென்றது.

16-2-1926 என் மகள் படிக்கும் ‘வித்யோதயா' பள்ளியின் ஆண்டு விழாவுக்குச் சென்றோம். விழா நன்கமைந்தது என்ற போதும் பிள்ளைகள் அனைவரும் ஐரோப்பிய முறையில் வளர்க்கப்பட்டுள்ளதால் நம் முறையில் அவர்கள் ஒழுகு வதில்லை. அவர்தம் அயல்நாட்டுப் படிப்பும் நாகரிகமும் எனக்குப் பிடிக்கவில்லை. நான் எதிர்பார்த்தபடியே, கூட்டத் தலைவர் திரு.தி.இ. மாயர் இவ்வகைக் கல்வியைக் கண்டித்தார்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/263&oldid=1592622" இலிருந்து மீள்விக்கப்பட்டது