பக்கம்:மறைமலையம் 30.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

269

3. தனித் தமிழ்

தமிழரனைவரும் பண்டுபோல் தமக்கும் தம் இல்லங்களுக்கும், தம் ஊர்களுக்கும் பிறவற்றிற்கும் எல்லாம் தூய தமிழ்ப் பெயர்களையே அமைத்தல் வேண்டுமன்றி வடமொழி முதலான வேற்றுமொழிச் சொற்களைப் பெயர்களாக அமைத்தல் ஆகாது.

தமிழ்மொழி கற்கும் தமிழ் இளைஞர் ஒவ்வொருவரும், அவர் தமக்குத் தமிழ் கற்பிக்குந் தமிழாசிரியர் ஒவ்வொருவரும் வடமொழி முதலான பிறமொழிச் சொற்களைத் தமிழின்கண் வந்து நுழையாதபடி அறவே விலக்கி, இப்போது வழங்காமற் பழைய தமிழில் வழங்கிய சொற்களையே மீண்டும் எடுத்து வழங்கித் தமிழை வளம்படுத்திக் காக்கக் கடவராக.

திருக்குறளின் காலத்தும் அதற்கு முற்பட்ட காலத்தும், யற்றப் பட்ட பழைய செந்தமிழ் நூல்களைப் பார்த்தால் தமிழின் சொல்வளம், பொருள்வளம் நன்கு விளங்கும். இவ்வளவு சிறந்த தமிழ் மொழியைப் பேசிய பழைய தமிழ் மக்கள் எவ்வளவு சிறந்த நாகரிகம் வாய்ந்தவர்களாயும், பிற மொழியாளர்களுக்கும், அவர்களுடைய சொற்களுக்கும் அடிமைப்படாத எவ்வளவு தனிப்பெருஞ் சிறப்பு உடையவர்களாயும் இருந்திருக்க வேண்டும்.

மற்றை மொழியின் உதவியை வேண்டாது தனித்து இயங்க வல்ல சொல்வளமும் பொருட் செழுமையுமுடைய நம் செந்தமிழ் மாழியை அதற்கே அதற்கே உரிய சொற்களால் வழங்காமல் அயல்மொழிச் சொற்களை இடையிடையே நுழைத்து அதன் அழகையும் வலிமையையும் சிதைத்தல் பெரியதொரு குற்றமாமென உணரலானேம்; இன்றியமையாது வேண்டப் பட்டாலன்றித் தமிழில் பிற சொற்களைப் புகுத்தல் நிரம்பவும் பிழைபாடுடைத்து.

ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/302&oldid=1592667" இலிருந்து மீள்விக்கப்பட்டது