பக்கம்:மறைமலையம் 30.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

8. இஞ்ஞான்றை மனை வாழ்க்கை

இல்லை,

இல்லை,

ஆனால், இப்போது நடைபெறும் மனைவாழ்க்கை எத்தன்மையாய் இருக்கின்து? அஃது உலகிய லொழுக்கத்திற்கு உயிர்போல்வதாகிய காதலன்பின் வழிச்சொல்கின்றதா? சிறிதுமேயில்லை. சாதிவேற்றுமை யென்னும் கொடியதூக்குக்கயிறானது காதலன்பின் கழுத்தை இறுக்கிவிட்டது; காதலன்பிற் சிறந்து மறுவற்றமதிபோல் விளங்கத்தக்கவரான நம் பெண்மணிகளின் கற்பொழுக்கத்தை நிலைகுலைத்து அதனைப் பழிபாவங்களால் மூடிவிட்டது? எந்தப் பெண்மகளாவது தான் காதலித்த இளைஞனை மணங்கூட இடம் பெறுகின்றனளா? எள்ளளவும் இல்லையே, ஏன்? ஒரு சாதிக்குள்ளே தான், ஒருபது வீடுகளே யுள்ள ஓர் இனத்திலே தான் அவள் ஒருவனை மணக்கவேண்டும். அவள் கயல்மீனையொத்த கண்ணழகியா யிருந்தாலென்ன! கண்குருடான ஒருவனைத் தவிர வேறு மணமகன் தன் இனத்திற் கிடைத்திலனாயின் அவள் அவளையேதான் மணந்து தீரல் வேண்டும்! அவள் முத்துக் கோத்தாலொத்த பல்லழகியாய் இருந்தாலென்ன! தன் பாழும் இனத்தில் ஒரு பொக்கை வாய்க்கிழவனைத் தவிர வேறுமணமகன் கிடைத்திலனாயின், அவள் அவனையேதான் மணந்துதீரல் வேண்டும்! அவள் பலகலை கற்றுக் கல்வியறிவிலும் இசை பாடுவதிலும் நுண்ணறிவிலும் சிவநேய அடியார் நேயங்களிலுஞ் சிறந்த கட்டழகியா யிருந்தாலென்ன! இறுமாப்பே குடிகொண்ட தன்சிறுமாக்குடியிற் கல்வியிருந்த மூலையே கண்டறியாதவனும், பாட்டுப்பாட வாயைத் திறந்தால் ஓட்டமாய் வர வண்ணானை வருவிப்பானும், அறிவை ஓட்டிவிட் L வறுமூளை யுடையானுங், கறுப்பண்ணன் மதுரைவீரன் மாரியம்மன் முதலான வெறுக்கத்தக்க பேய்கட்கு ஊனுங்கள்ளும் படைத்துக் குடித்து வெறிப்பானுமாகிய ஒருவனைத் தவிர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/65&oldid=1592037" இலிருந்து மீள்விக்கப்பட்டது