பக்கம்:மறைமலையம் 30.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

மறைமலையம் - 30 -

அங்ஙனமே அவரைக் கண்ட பரவை நாச்சியாரும் இதற்கு முன் தாம் கண்டறியாத ஒரு தெய்வக்காதல் கொள்ளப்பெற்று,

66

"முன்னேவந் தெதிர்தோன்றும் முருகனோ பெருகொளியாற்

றன்னேரில் மாரனோ தார்மார்பின் விஞ்சையனோ

மின்னேர்செஞ் சடையண்ணல் மெய்யருள்பெற் றுடையவனோ என்னேஎன் மனந்திரிந்த இவன்யாரோ எனநினைந்தார்”

பார்மின்கள் அன்பர்களே! இத்தெய்வப் பெருமானும்

பருமாட்டியும் அக்காதலன்பின்

ஒருவரை யொருவர்

காதலித்து,

வயமாய் உணர்வு செல்லுங்காலுஞ் சிவபெருமான் றிருவருளே இவ்வாறு உருவுகொண்டு தோன்றியது போலும் எனக் கருதி வியக்கின்றார்! தெய்வத்தை மறந்து, உயர்ந்த நோக்கங்களை மறந்து இழிந்த ஊனுடம்பின் சேர்க்கையிலேயே நினைவு சென்று காமங் காழ்ப்பேறி நிற்கும் உலகத்து மக்களின் காம உணர்ச்சிக்கும், சிவபிரான் றிருவருளிலேயே நினைவழுந்தி அவ்வருள் விளக்கமாகவே தம் காதலரை நினைக்குஞ் சுந்தரர் பரவையாரின் தெய்வக் காதல் உணர்ச்சிக்கும் எவ்வளவு வேற்றுமை! தம்முள் ஒத்த இயல்பினரான தெய்வக் காதலர் மணவாழ்க்கைக்குச் சுந்தர மூர்த்திகளின் மணவாழ்க்கையினுஞ் சிறந்ததொன்றனை இவ்வுலகில் வேறெங்கணுங் காண்டலரிது. இங்ஙனமே, இவர் தம் மற்றை மனைவியரான சங்கிலி நாச்சியார்க்கும் இவர்க்கும் உண்டான தொடர்புந் தெய்வக் காதலின்பாற் பட்டதாகும்.

அற்றேல், ஒருவர் இருவரைக் காதலித்தல் இயலுமோ வெனின்; ஆண்மகற் காயின் அஃதியலும்; என்னை?

“பெருமையும் உரனும் ஆடூஉமேன

என்றும்,

وو

“அச்சமும் நாணும் மடனும் முந்துறத்த நிச்சமும் பெண்பாற் குரியஎன்ப'

என்றும் ஆசிரியர் தொல்காப்பியார் ஆண்பெண் இயற்கை

வவ்வேறாதலை

வேறுபாட்டினை

அறிவுறுத்தலானும்,

வ்வியற்கை

நன்குணர்ந்தே நாகரிக மக்கள்

வாழ்க்கையினுள் ஓராண்மகன் மனைவியர் பலரை மணக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/71&oldid=1592066" இலிருந்து மீள்விக்கப்பட்டது