பக்கம்:மறைமலையம் 30.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

து

61

தவவாழ்க்கைக்கு வேண்டுவனவெல்லாந் தேடிக்கொடுத்து அவர்க்குத் துணையாக நிற்கற்பால ரென்பதூஉம், அவர்க்குச் சுற்றத்தவராயுள்ளார் அவர் தவவாழ்க்கையில் அமர்ந்த காலந் தொட்டுச் செய்யாது விட்ட அறங்களை யெல்லாஞ் செய்து காண்டிருக்கற்பாலரென்பதூஉம் நன்கு பெறப்படுகின்றன அல்லவோ? பாருங்கள் அன்பர்களே! நம் முதலாசிரியர் எடுத்துக் கூறிய நம் தமிழ்முதுமக்களின் மனைவாழ்க்கையும் அதன் முடிவில் நோற்கப்படுவதாகிய அவர் தந் தவவாழ்க்கையும் எவ்வளவு சிறந்தனவாய், இறைவன் வகுத்த அன்பொழுக்கத் திற்குச் சிறிதும் மாறுபடாதனவாய் விளங்கி நிற்கின்றன! பௌத்த சமய சமயங்களும் அவற்றைப் பின்பற்றி எழுந்த ஆரிய மிருதி நூல்களுந் தவவாழ்க்கையைத் துறவுநெறியின்

பாற்படுத்து, மனைவி மக்கள் சுற்றம் முதலிய தொடர்புகளை யெல்லாம் முற்ற அறுத்தபின் தவஞ்செயற் பாற்றென்று வலியுறுத்தாநிற்க, நம் செந்தமிழ்த் தனிமுதல் நூலாகிய தொல்காப்பியமோ கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் பிரியாது நின்றே மக்களுஞ் சுற்றமுந் தமது தவத்திற்கு உதவியாய் நிற்பத் தவத்தினை முயலற்பாலர் என அறிவுறுத்துகின்றது. இவ்விருவேறு அறிவுரைகளில் எது சிறந்ததென்பதைச் சிறிது ஆராய்ந்து பார்மின்கள்.

ஒருவன் தன்வாழ்நாளில் நீண்டகாலம் வரையில் அன்பு பாராட்டி வந்த தன் மனைவி மக்களை அன்பின்றிப் பிரிந்து, பிறரிடும் அறச்சோற்றிற்காக ஊர்ஊர் திரிந்து, ஐயம் ஏற்றுண்டு மரத்தினடியிலும் புறந்திண்ணையிலும் யருந்திக் கிடந்து நோயிலுந் துன்பத்திலு உழல்வதாகிய வடநாட்டினர்தம் துறவுவாழ்க்கை நல்லதோ! தம் உடம்பையும் உயிரையும் அன்பினால் இன்புற வளர்த்த தன் மனைவியையும் அவள்பாற் றோன்றிய அன்புடை மக்களையும் பிரியாதிருந்து, அவர் தனக்கு ஏதுங் குறையில்லாது தொண்டு செய்யத் தானுந் தன்மனையாளுந் தவத்தின் அமர்வதாகிய தென்னாட்டினர்தந் தவவாழ்க்கை நல்லதோ! பசி நேர்ந்தபோது உணவும் பெறுதல் அரிதாதலின் தன்னுடம்பே தனக்குஞ் சுமையாகத், தாம் வருந்தித் தேடிய உணவிலிருந்து பிறர் தனக்கு உணவளிக்க வேண்டியிருத்தலிற் பிறர்க்குஞ் சுமையாகத், தன் மனைவி மக்களை மிடியிலுந் துன்பத்திலும் உழலவிட்டுத் தானும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/94&oldid=1592182" இலிருந்து மீள்விக்கப்பட்டது