பக்கம்:மறைமலையம் 31.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

99

ர் பயவாது. ஆனாற் செல்வ வளனுமின்றி, ஏழைமையு மின்றி, நடுநிலையிலுள்ளவர்கள் மனைவியர் பலரை மணந்து துன்பமின்றி வாழ்க்கை நடத்துதல் இயலுமோவெனின்; இயலும். பண்டைக் காலத்தில் ஆண்பாலார் மட்டுமேயன்றிப் பெண்பாலாருங் கூட இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்க் கல்வியிற் சிறந்த புலமை யடைந்து விளங்கியதுமல்லாமற், பல திறப்பட்ட கைத்தொழில்களிலுந் தேர்ச்சியடைந்து திகழ்ந்தனர். அஃது ஒக்கூர் மாசாத்தியார், ஒளவையார், காக்கை பாடினியார், நச் ச்செள்ளையார், காவற்பெண்டு, குறமகள் இளவெயினி, பாரிமகளிர், பெருங்கோப்பெண்டு, நக்கண்ணையார், பேய்மகள் இளவெயினி, பொன்முடியார், மாற்பித்தியார், மாறோக்கத்து நப்பசலையார், வெண்ணிக் குயத்தியார், காமக்கண்ணியார் முதலான பழந்தமிழ் மாதர்கள் தமிழ்கல்விப் புலமையிலும் ஏனைத் தொழிற் கல்விப் புலமையிலுஞ் சிறந்து விளங்கினமை, புறநானூற்றில் அவர்கள் பாடியிருக்கும் அருந்தமிழ்ச் செய்யுட் களாலும், அவர் தம் பெயர்களாலும் நன்கறியக் கிடக்கின்றது. ஆகவே, ஆண்பாலாரைப் போலவே, பெண்பாலாருங் கல்விப் புலமையாலுங் கைத்தொழிற் புலமையாலும் பொருள் ஈட்ட வல்லவர்களாயிருந்தால், அவர்கள் தங் கணவனது வருவாயையே எதிர்பார்த்துப் பிழைக்க வேண்டுவதில்லை. அங்ஙனம் புலமை வாய்ந்த மனைவியரையுடைய கணவன் மிடிப்பட்டு வருந்தாமலே இனிது வாழ்க்கை செலுத்து வானென்பதுஞ் சால்ல வேண்டுவதில்லை. இங்ஙனம் இங்ஙனம் இரு பாலாரும் ஒருமித்துத் தத்தம் முயற்சிகளால் வாழ்க்கை செலுத்து தலாலும், ஓர் ஆண்மகன் தான் முதன் மணந்த காதன் மனைவியையே தொடர்ந்து மருவாமற் காமக் கிழத்தியராம் ஏனை மனைவியரையும் ஒருவர் பின்னொருவ ராக மரு வி வாழ்ந்து வருதலாலும், பெண்பாலார் உடல்நல மனநலங்கள் மிகுந்து மூன்று அல்லது நான்காண்டுகளுக்கு ஒருகால் ஒரு மகவு ஈன்று அதனைச் செவ்வனே வளர்த்துவர அவர் தங் கணவனும் உடல்நல மனநலங்கள் மிகுந்து இனிது வாழ்வானாவது.

இனிப், பண்டைக்காலம் முதல் இடைக்காலம்வரை யிற் பெருகியும், அதன்பின் இக்காலத்தில் அருகியும் நடைபெறா நிற்கும் பன்மனைவியர் மணம் இஞ்ஞான்றைத் தமிழ் மக்கட்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/124&oldid=1592851" இலிருந்து மீள்விக்கப்பட்டது