பக்கம்:மறைமலையம் 31.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

137

நறுமணங் கமழ அலர்ந்து விளங்கா நின்ற தாமரையும் அல்லியும் பார்ப்பதற்கும் மோப்பதற்கும் எவ்வளவு இனியன வாய் இருக்கின்றன!

இங்ஙனமே, மாந்தர் எல்லாரும் பொதுவாகவே மலமுஞ் சிறுநீரும் முதலான உவர்க்கத்தக்க கழிவுகள் உடையராயினும், அவருட் சிலர் கண்ணையுங் கருத்தையுங் கவரும் பேரழகு வாய்ந்தவராயும், வேறு சிலர் வெறுத்து விடத்தக்க அருவருப் பான வடிவம் உடையராயும், மற்றுஞ் சிலர் அழகும் அருவருப்பும் இல்லா யாக்கையினராயும் இருத்தலை நாம் நாடோறும் நங் கண் முன்னே காண்கின்றனம் அல்லமோ? அதுமட்டுமோ,மக்கள் தம்முடம்பின்கணிருந்து வெளிப்படும் நறுநாற்றந் தீ நாற்றத்தானும் பல திறப்படுகின்றனர். சிலர் நமதருகே வரின் அவருடம்பிலிருந்து வருந் தீ நாற்றம் நம்மாற் பொறுக்கக் கூடவில்லை. பின்னுஞ் சிலர் நம்பால் அணுகின் நறுநாற்றந் தீநாற்றம் இரண்டுமே அவர் பாலிருந்து வரக் காணேம். இனி, மிக அரிய ஒரு சிலர் நம்மருகே வந்தால் அமைதியான ஒரு நறுமணம் அவர்பாலிருந்து வருதலையும் நாம் ஒரோவொருகால் உணர்ந்திருக்கின்றேம். இஃது இயற்கைக்கு மாறென்று சிலர் நினைத்தல் கூடும். ஆனால், இங்ஙனம் பல்வேறு நாற்றம் இயற்கையிலேயே அமைந்திருத்தலை இயற்கைக்கு மாறென்று கூறுவது யாங்ஙனம் பொருந்தும்? இந்நிலவுலமெங்கணும் உள்ள மக்கட் குழுவினர் இயற்கைகளை நுண்ணிதின் ஆராய்ந் துணர்ந்த டைலர்° என்னும் ஆங்கில ஆசிரியர் பல்வேறு வகையான மக்கட் குழுவினர் உடம்புகளிற் பல்வேறு வகையான நறுநாற்றந் தீநாற்றம் இயற்கையே யமைந்து வெளிவருதலை நன்கெடுத்து நன்கெடுத்து விளக்கி விளக்கி யிருக்கின்றார்." மக்களுடம்பில் இயற்கையே உண்டாம் நறுநாற்றந் தீநாற்றம் போற், சில விலங்குகளிலும் நறுநாற்றந் தீநாற்றம் உண்டாதலைக் கூர்ந்து பார்மின்கள்! பூனையின் உடம்பிலிருந்து முடை நாற்றமே வருகின்றது; ஆனாற், புழுகு பூனையின் உடம் பிலிருந்தோ புழுகு மணங் கமழ்கின்றது. இங்ஙனமே அரிதிற் சிற்சிலர் உடம்பிலிருந்துங் கூந்தலிலிருந்தும் போந்து நறுமணங் கமழும் உண்மை, மக்கள் உடம்பின் றன்மைகளை நன்காராய்ந் துணர்வார்க்கு விளங்காமற் போகாது. பண்டைத் தமிழ்ப் புலவரான ஆசிரியர் நக்கீரனார் தாமும் மக்களியற்கை யினை

ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/162&oldid=1592893" இலிருந்து மீள்விக்கப்பட்டது