பக்கம்:மறைமலையம் 31.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

மறைமலையம் - 31

காணப்படுகின்றன. இப்பிற்கால முறைப்படி அமைக்கப் படாமல், இடைக்கால முறைப்படி சிவலிங்கம் நந்தி பலிபீடம் என்னும் மூன்று மட்டுமே வைத்து அமைக்கப்பட்ட பழைய கோயில்களும் ஆங் காங்குக் காணப்படுகின்றன. இனி, நந்தியும் பலிபீடமும் இல்லாமல் மிகப் பழைய கால முறைப்படி சிவலிங்கம் ஒன்று மட்டுமே நிறுவி அமைக்கப்பட்ட பழைய கோயில் களும் இடையிடையே அருகிக் காணப்படுகின்றன. இம் முற்கால பிற்காலத் திருக்கோயிலமைப்பின் கருத்தை விரிவாகத் தெரிய வேண்டுவார் எமது சைவசித்தாந்த ஞான போதத்தை நோக்குவாராக.

1.

அடிக்குறிப்பு

Read Sir John Marshall's “Mohenjo-daro and the Indus Civilization."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/223&oldid=1592957" இலிருந்து மீள்விக்கப்பட்டது