பக்கம்:மறைமலையம் 31.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

207

காணப்படுகின்றது. கடவுள் எந்த உயிரையுந் தனக்கெனக் காலை செய்யாமை போல, யானையுந் தனது உணவுக்கென்று எந்த இயங்கும் யங்கும் உயிரையுங் கொலை செய்யாததாய்த் தழைகளையும் நாணற் புல்லையுங் கனி களையுந் தின்று உயிர்வாழுஞ் சைவவிலங்காய் விளங்கு கின்றது. கடவுள் தன்னை அன்பினால் உருகி வழிபடும் ஏழை அடியார்க்கு எளியராய் அவர் வேண்டுவனவெல்லாம் விரும்பிச் செய்தல் போல, யானையுந் தன்னுடன் அன்பினாற் பழகுவாரிடத்தே தனது பெருவலிமையினைக் காட்டாது அவர்க்கு மிக அடங்கி அவர் வேண்டும் உதவி களெல்லாஞ் செய்து அவர்க்குப் பெரிதும் பயன்படுவ தொன்றாய்த் திகழ்கின்றது. இங்ஙனமாக

ஒரு

யானையானது பலவகையிற் கடவுளியல்போடு சிறிதாயினும் ஒத்து நிற்றல் கண்டே தமிழாசிரியர் ஓங்கார வடிவினைப் பொது மக்கள் எல்லாரும் உள்ளம் ஒருவழிப்பட்டு நிற்கக் கண்ணாரக் கண்டு வணங்குதற்குச் சாலவும் ஏற்ற தொன்றாய் யானைமுகமுடைய பிள்ளையார் உருவினை அமைத்து வைக்கலாயினரென்று தெற்றென அறிந்து கொள்ளல் வேண்டும். இதுவே யானைமுகமுடைய பிள்ளையார் வழிபாடு ான உண்மை வரலாறாகும்.

உணட

6

ஆனால், வடமொழியிற் புராண நூல்கள் இயற்றினவர், இழிந்த மக்களின் நடையைக் காட்டிலும் அருவருக்கத் தக்க செய்திகளைப் பொய்யாகப் பிணைத்துக் கட்டிச் சிவபிரான் மேலும் உமைப்பிராட்டியார்மேலும் அவை தம்மை ஏற்றி, யானைமுகமுடைய பிள்ளையார் அவ்விருவர்பால் நின்றுந் தோன்றிய வரலாறுகளைப் பற் பலவாறு ஒன்றோ டொன்று மாறுபடப் பகர்ந்திருக் கின்றனர். மேலே யாம் காட்டிய உண்மை வரலாற்றினை யுணர்ந்தவர், வடநூற் புளுகர் கட்டிவிட்ட இழிந்த வரலாறு களைக் கண்டு மனங்களையார். அதுநிற்க.

இனி, யானைமுகமுடைய பிள்ளையாராகிய முழுமுதற் கடவுள்வணக்கம் தி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் ஈற்றிலாதல் ஆறாம் நூற்றாண்டின் துவகத்திலாதல் தோன்றிய தாகல் வேண்டுமென்பதனைப் பல வலியசான்று கள் கொண்டு எமது மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூலின்கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/232&oldid=1592966" இலிருந்து மீள்விக்கப்பட்டது